Sunday, January 20, 2013

ஓடி உதைத்து விளையாடு!-தமிழ் உணர்வை ஊட்டி நீயாடு!





ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
உணர்வை ஊட்டி நீயாடு! 
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல 
பண்பை என்றும் நீநாடு! 
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப் 
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு 
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற 
கொள்கையைக் காக்க தயங்காதே! 

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு 
எண்ணி எதையும் செய்வாயே! 
செயற்கையைத் தேடி அலையாதே-நம் 
செந்தமிழ் பேச மறக்காதே! 
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ 
முயன்றால் வெற்றி அவ்வினையாம் 
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே 
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே! 

ஒவ்வொர் நாளும் விளையாடு!-பழுது 
உரிமைக்கு வந்தால் போராடு! 
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர் 
ஏய்க வந்தால் நீசாடு 
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில் 
என்றும் வாரா ஒருகேடு 
செவ்வழி இவையே நலங்காண-பிறர் 
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்
   

22 comments :

  1. மனதில் கொள்ள வேண்டிய வைர வரிகள் ஐயா.

    ReplyDelete
  2. //முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
    முயன்றால் வெற்றி அவ்வினையாம் //
    நூற்றுக்கு நூறு சரி ஐயா. தமிழ் உணர்வை உங்களைப் போன்றவர்கள் தான் இக்கால சந்ததியருக்கு ஊட்டவேண்டும்.

    ReplyDelete
  3. சிறப்பான வரிகள். மனதில் கொண்டால் மகிழ்வே....

    த.ம. 2

    ReplyDelete
  4. இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
    எண்ணி எதையும் செய்வாயே!

    விழிப்புணர்வூட்டும் வரிகள் உணர்ந்தால் சிறப்பே.

    ReplyDelete
  5. உணர்வை ஊட்டும் விளையாட்டு...

    ReplyDelete
  6. கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
    கொள்கையைக் காக்க தயங்காதே!
    உண்மை அய்யா

    ReplyDelete
  7. கவிதை மிகவும் அருமை ஐயா.

    ReplyDelete
  8. சிறப்பான கவிதை. பல நற்பண்புகளை எடுத்துச் சொல்கின்றது.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மனம் தொடும் அருமையான வரிகள்
    மீண்டும் மீண்டும் படித்து மகிழத்தக்க கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. அருமையான அறிவுரை கவிதை! பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  12. //செந்தமிழ் பேச மறக்காதே! //
    நல்லாச் சொன்னீங்க!
    தமிழர் பலர் தமிழை மறந்து வெகு காலமாகி விட்டது!இப்போது டமில் தான் பேசுகிறார்கள்!

    ReplyDelete
  13. உங்கள் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு சிந்தனை !

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...