Wednesday, November 20, 2013

என் முகநூல் பதிவுகள்! -நான்கு





இளமைக் காலத்தில் வரும் வறுமை துன்பத்தைத் தரும்! .முதுமை காத்தில் வரும் வளமும் அனுபவிக்க முடியாது துன்பத்தைத் தரும் ! எது போல என்றால் ,சூடுதற்கு ஏற்ற காலமல்லாதக் காலத்தில் பூத்த மலரையும் ,அனுபவிக்க உரிய கணவன் இல்லாத மங்கையின் அழகையும் ஒக்கும்!

பாலைக் குடிக்க குழந்தை அழுகிறது ,என்றால் பாவமென விட்டு விடுவாளா தாய்! பசியொடுத்தாலும், குழந்தை அழத்தானே செய்யுமென்று அறியாதவளா அவள்!

மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா ? என்று கேட்கும் மனிதன், தன் மகன் நடக்க நடைவண்டி செய்துத் தருகிறானே! அது, ஏன்?

பாலைக் காச்சினாலும் சுவை குன்றுவதில்லை! சங்கு சுட்டாலும் வெண்மை மாறுவதில்லை!அதுபோல ,மேன்மக்கள் என்ன நேர்ந்தாலும் தம் , மேன்மை தவறமாட்டார் ! ஆனால் கீழ்க் குணமுள்ள கீழ்மக்கள் , நாம்
எவ்வளவு நட்பு பாராட்டினாலும் தம்,இயல்பில் மாறமாட்டார்


நஞ்சுக் கனிகளைக் கொண்ட மரம் ஒன்று ஊரின் நடுவே பழுத்திருந்தால்அதை அறியாத மக்களுக்கு மரணத்தையே கொடுக்கும் !அதுபோல ,கெடுமதியும் துரோக சிந்தனையும் கொண்ட தீயவன் ஒருவனிடம் உள்ள செல்வமானது, அவ்வூர் மக்களுக்குத் தீமையைத்தான் செய்யும்

ஊரின் நடுவிலே உள்ள குளத்தில் சுத்தமான குடிநீர் நிறைந்திருந்தால், அந்த ஊர்மக்கள் அனைவருக்கும் பயன்படும் ! அதுபோல, தரும சிந்தனையும் கொடைக் குணமும் உள்ள நல்லவன் ஒருவன் பெற்ற செல்வமானது
அனைவருக்கும் பயன்படும்


                                           புலவர்  சா  இராமாநுசம்


16 comments :

  1. அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றன

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. முதல் வார்த்தைதான் முத்தானது

    ReplyDelete
  4. #மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா ? என்று கேட்கும் மனிதன், தன் மகன் நடக்க நடைவண்டி செய்துத் தருகிறானே! அது, ஏன்?#
    செய்து தரக்கூட முடியாத மனிதர்கள் அய்யா நாம் !
    த,ம 3

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை!

    முதலாவது உணர்வை உலுக்குவது!..

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    பதிவு அருமையாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. முகநூல் பகிர்வுகள் அனைத்துமே அருமை புலவர் ஐயா.....

    ReplyDelete
  8. நற் கருத்துக்களைத் தாங்கி நிற்கும் மற்றுமொரு ஆத்திசூடி !!
    வணங்குகின்றேன் ஐயா .

    ReplyDelete
  9. நல்ல நல்ல கருத்துக்கள் புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...