Wednesday, May 28, 2014

முடிந்தது ஒருவகையாய் இங்கே எல்லாம்-இது முடியரசா ! குடியரசா ! காலம் சொல்லும்!




முடிந்தது  ஒருவகையாய்  இங்கே எல்லாம்-இது
   முடியரசா ! குடியராசா ! காலம்  சொல்லும்-பொழுது
விடிந்தாலும் வெளிச்சமது  மெல்ல  வருமே –அதற்குள்
    வேண்டாத  வாதங்கள்  தொல்லை  தருமே

மந்திரத்தால்  மாங்கயை  வீழ்த்தல்  ஆகா –ஏறிய
    விலைவாசி உடனடி  குறைந்து  போகா -உடன்
சிந்தித்து  செயல்படவும் ஆள  வந்தார் – மேலும்
    சிலமாதம் காத்திருக்க  வாக்குத்  தந்தார் !


 பழையகள்  புதியமொந்தை  ஆகா  தென்றே –நாட்டில்
     பரவலாக மக்கள்தான் பேச  நன்றே –அவர்
விழைவனவே எதுவென்று  அறிதல்  வேண்டும்- அரசு
     விரைவாக  செயல்திட்டம்  தீட்ட  வேண்டும்

ஊழலுக்கு  வழியேதும்  இல்லா  நிலையே– திட்டம்
     உருவானால் கையூட்டு தருவார்  இலையே!-அந்த
சூழலுக்கு ஏற்றபடி இருந்தால்  போதும் –திட்டம்
      செயல்பட்டால் வெளிப்படையாய்  குறையும் தீதும்


     
   
    
    
 

19 comments :

  1. அனைவரும் எதிர்பார்ப்பும் அதுவே
    ஆக்கப் பொறுத்தோம்
    ஆறப் பொறுப்போம்

    ReplyDelete
  2. கருத்தாய்ச் சொன்னீர்கள். காலம் சொல்லும் பதிலை.

    ReplyDelete
  3. பொய் வாக்குறுதிகளை கேட்டு கேட்டு காதுக்கு புளித்து விட்டது ,இவர்கள் எப்படியோ ?காத்திருந்து பார்ப்போம் !
    த ம 3

    ReplyDelete
  4. காலம் தான் பதில் சொல்லும்..... பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ReplyDelete
  5. முடியரசா
    குடியரசா
    காலம் நிச்சயம்
    பதில் சொல்லும் ஐயா
    தம +1

    ReplyDelete
  6. கருத்துள்ள வரிகள் ஐயா....

    ReplyDelete
  7. // முடிந்தது ஒருவகையாய் இங்கே எல்லாம்-இது
    முடியரசா ! குடியராசா ! காலம் சொல்லும் //

    ஆமாம் அய்யா! காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

    ReplyDelete
  8. முடியரசோ, குடியரசோ, நமக்கு நல்லஅரசு வந்தால் போதும் ஐயா....
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  9. கவி வரிகள் அருமை...
    நிறைவேறும் என்ற கனவுடனே
    காத்திருந்துதான் பார்க்கவேண்டும் ..

    ReplyDelete
  10. த.ம எட்டு
    ஊழல் ஒழியுமா?
    காத்திருப்போம் நம்பிக்கையோடு
    http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

    ReplyDelete
  11. ஊழல் ஒழிந்தால் நாட்டுக்கு நல்லது

    ReplyDelete
  12. வணக்கம்!

    வண்ணத் தமிழ்உறவை வாழ்த்தி வரவேற்றீர்!
    எண்ணம் அடையும் இனிப்பு!

    ReplyDelete

  13. ஐயா வணக்கம்

    தங்கள் மின்னஞ்சலை அறியத் தரவும்
    kambane2007@yahoo.fr

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...