Friday, December 25, 2015

ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால



ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில்
எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால
தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே
திருக்குறள் சொல்லும் நீதி ஒன்றாம்
ஓதிய வள்ளுவன் உரையைக் கொண்டே-தமது
ஊர்மெச்சி பாராட்ட செய்யின் தொண்டே
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும்
மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்

புலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. என் குற்றம் ஆயும் வழக்கம் எனக்குண்டு. பல பதிவிலும் செய்திருக்கிறேன் என்றும் பொருந்தும் கவிதைதான்

    ReplyDelete
  2. அவ்வாறானவனை எங்குதான் காண்பது ஐயா மிக அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. அருமை ஐயா
    எங்கு காண்பது என்றுதான் தெரியவில்லை
    தம +1

    ReplyDelete
  4. சரியாக சொன்னீர்கள் அய்யா!
    த ம 3

    ReplyDelete
  5. "குற்றம் கடிதல் எவர்க்கும் எளிதே!"
    "நல்லதை நாடே போற்றும்!"
    தங்கள் வடித்த கவிதையைப் போன்றே!
    ஆழமான கருத்துடன் அமைந்த அழகுக் கவிதை புலவர் அய்யா!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...