Showing posts with label ;;நிம்மதி! இன்மை தவிப்பு கவிதை புனைவு. Show all posts
Showing posts with label ;;நிம்மதி! இன்மை தவிப்பு கவிதை புனைவு. Show all posts

Thursday, May 4, 2017

தொலைத்திட்ட நிம்மதியைத் தேடுகின்றேன்—மேலும் தொலைத்தயிடம் அறியாது வாடுகின்றேன்





தொலைத்திட்ட  நிம்மதியைத்  தேடுகின்றேன்—மேலும்
     தொலைத்தயிடம்  அறியாது வாடுகின்றேன்
கலைத்துவிட்ட தேனடையின் ஈக்கள்வந்தே- தேடித்
      கலைத்தவனை கொட்டிவிடும்  துயரம்தந்தே
நிலைத்துவிட  உள்ளத்தில் நொந்துபோனேன்-துளியும்
      நிம்மதியைக்  காணாது  ஏங்கலானேன்
அலைத்தடத்தில் கடலோர  மணலின்  வீடாய்-அந்தோ
       ஆயிற்றே என்செய்வேன் அணைத்தும்  வீணே!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...