Showing posts with label இந்தியதலைமகன் எங்கள் தமிழ்மகன் மறைவு இரங்கல் கவிதை. Show all posts
Showing posts with label இந்தியதலைமகன் எங்கள் தமிழ்மகன் மறைவு இரங்கல் கவிதை. Show all posts

Tuesday, July 28, 2015

இந்திய நாட்டின் தலைமகன் ஆனார் சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!



அந்தோ மறைந்தார் அப்துல் கலாமே
நொந்தார் அனைவரும் நோகார் இலமே!
இந்திய நாட்டின் தலைமகன் ஆனார்
சிந்தனைச் சிற்பியேன் செப்பாது போனார்!

கனவும் மெய்படக் காணாது ஏக
நினவாய் என்றும் நிலையென ஆக!
மனமெனும் திரையில் மறையா ஓவியம்
இனமது தமிழரின் இதய காவியம்!

வாழ்கநீர் கால வரலாற்றில் ஒன்றென
சூழ்கவே உம்புகழ் சுடர்தரும் கதிரென!
ஆழ்கஉம் அறிவியல் அலைமிகு கடலென
மூழ்கிடாக் கலமே அப்துல் கலாமே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...