நம்பும்
படியே இல்லையா-நம்
நாட்டின் நடப்பு சொல்லையா!
தும்பை விட்டு
வால்தன்னை-பிடித்து
துரத்த நினைப்பது போலய்யா!
விலகி விட்டோம் என்றொருவர் -ஈழம்
வேண்டினார் அவையில் மற்றொருவர்
இலவு
காத்த கிளிதானே -நம்
ஈழ மக்கள் நிலைதானே!
மாணவர் எழுச்சி கண்டோமே-மனதில்
மகிழ்ச்சி நாமும் கொண்டோமே
வீணல என்பதை
உணர்ந்தோமே-அவர்
வீரத்தில் விளைந்த தொண்டாமே!
அணையா விளக்காய் எரியட்டும்-ஈழம்
அடைவோம் உலகுக்கே புரியட்டும்
துணையாய் என்றும் இருப்போமே-நம்
தோளும் கோடுத்து சுமப்போமே!
தேர்தல்
விரைவில் வந்திடுமே- அதுவும்
தினமும் மாற்றம் தந்திடுமே
ஊர்தனில் இதனை உணர்த்திடுவீர்-கடந்த
உண்மைகள் தம்மை உரைத்திடுவிர்!
நாடகம் நடத்தும் கட்சிகளை -நாளும்
நடக்கும் பற்பல காட்சிகளை
ஊடக வாயிலாய் உணர்வாரே- தம்
உள்ளத்தில் பதித்து கொள்வாரே!
புலவர் சா இராமாநுசம்
ஊடக வாயிலாய் உணர்வாரே- தம்
உள்ளத்தில் பதித்து கொள்வாரே!
புலவர் சா இராமாநுசம்