Showing posts with label மதுவிலக்கு போராட்டம் சசிபெருமாள் மரணம் அரசு இனியாவது சிந்திக்க. Show all posts
Showing posts with label மதுவிலக்கு போராட்டம் சசிபெருமாள் மரணம் அரசு இனியாவது சிந்திக்க. Show all posts

Saturday, August 1, 2015

மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை மேலும் தொடராது ஓய ஈண்டும்!


காந்திய வாதியாய் மதுவை நீக்க-வாழ்ந்த
காலமெலாம் போராடி உயிரைப் போக்க!
வாந்தியாய் இரத்தமே சிந்தி விட்டார்-செய்தி
வந்திட நல்லோரும் கண்ணீர் விட்டார்!
சாந்தமே உருவான சசிபெருமாள் இன்றே-மறவா
சரித்திர நாயகன் ஆனார் நன்றே!
ஏந்திய கொள்கையில் மாற்ற மில்லை- அதில்
எள்ளவும் தன்னலம் என்றும் இல்லை!


எத்தனை முறையோ உண்ணா விரதம்-அவர்
இருந்துமே பயனின்றி போன விதம்!
இத்தகை முடிவிக்கே அவரும் வந்தார்-அந்தோ
இன்னுயிர் தன்னையும் பலியாய் தந்தார்!
சித்தமே கலங்கிட துயரம் பொங்கும்-உடன்
சிந்தித்து செயல்பட வேண்டும் இங்கும்!
மெத்தனம் வேண்டாமே ஆய வேண்டும்-இந்நிலை
மேலும் தொடராது ஓய ஈண்டும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...