Friday, November 16, 2012

எனது ஊரே எதுவெனக் கேட்பீர்!?




எனது ஊரே எதுவெனக் கேட்பீர்!
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல 
பெரிதாய் ஏதும் இல்லா தெனினும் 
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே 
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே 
இரண்டு அணைகள் இரட்டணை பேரே!
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம் 
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம 
வந்ததும் விரைவே! வடிவதும் விரைவே !
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே 
செப்பிட இதுதான என்னுடை விருப்பே !
மேலும்,
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் !
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம் 
சிற்றூர் என்றும் செப்பிட இயலா 
பேரூர் என்றும் பேசிட இயலா 
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண 
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க 
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும், 
செய்யும் தொழிலில் சிறப்பெனக் கருதி 
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும், 
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும 
தன்னேர் இன்றி செய்திடப் பலரும் 
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும் 
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும் 
சொல்லப் பலவே எல்லை இலவே 
சொல்வதில் கூட வேண்டும் அளவே 
அதனால்--நான் 
இருந்த காலதில் இருந்ததை அங்கே 
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே 
ஆனால்-- 
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே 
வேண்டியே நானும் வழிந்திட அன்பே 
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே 
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம் 
அடடா ஊரே முற்றம் மாற்றம 
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம் 
கனவாய ஆகிட கண்டேன் சிலரே 
நினவில் வைத்தெனை நலமா என்றார் 
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட 
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு 
பாடலை முடித்தேன் படித்திட நன்றி 

புலவர் சா இராமாநுசம்

Wednesday, November 14, 2012

மூத்த பதிவரே வாருங்கள் –உடன் முறையாய் அழைப்பினைத் தாருங்கள்




நிம்மதி வலைதனில் போயிற்றே சில
  நிகழ்வால் இந்நிலை ஆயிற்றே !
நம்மதி கொண்டு வொல்வோமா இதில்
   நமக்கென என்றே சொல்வோமா ?

ஒன்றுப் பட்டும் செய்வோமா நம்
    உரிமையைக் காத்து  உய்வோமா!
என்றும் தானே தூண்டுகிறேன் நல்
    இளைஞர் தம்மை வேண்டுகிறேன்!

வெள்ளம் வருமுன் அணைபோட நான்
    வேண்டும் என்றேன் எனைசாட
உள்ளம் கொண்டார் சிலபேரே ஆனால்
     உணர்ந்தார் இன்று பலபேரே!

குற்றம் யாரையும் சொல்லவில்லை வரும்
    கொடுமைக்கே வைப்போம் ஓரெல்லை!
கற்றவர் நாமென காணட்டும் அரசு
   கருத்தினில் மாற்றம் பூணட்டும்!

ஆட்டைக் கடித்த நிலையன்றே இது
    அடிமை யாக்கும் நிலையொன்றே!
கேட்டை நீக்க சிந்திப்போம் நாள்
    குறித்து  பதிவரே சந்திப்போம்!

மூத்த பதிவரே வாருங்கள் உடன்
    முறையாய் அழைப்பினைத் தாருங்கள்
காத்திட  இதுதான் இன்றுவழி எனில்
   காண்போம் என்றும் தீராப்பழி!

             புலவர் சா இராமாநுசம்