ஒப்புக்கே தீர்மானம் ஒபாமா கொண்டுவர
செப்பிக்க ஆதரவும்
செப்பியது இந்தியா
உப்புக்கும்
உதவாத ஒன்றலவா அதுவும்
தப்பிக்க மாற்றுவழி
தமிழர்களே காணுங்கள்!
ஓரங்க
நாடகத்தை ஒருவழியாய் அனைவருமே
பேரங்கம்
தன்னில் பேசிமுடித் துவிட்டார்
ஊரெங்கும்
ஊர்வலமே உண்ணா விரதமென
யாரிங்கே
செய்யினும் என்னபயன் தனித்தனியே!
உள்ளத் தூய்மையுடன் ஒன்றுபட்ட நிலையுண்டா
கள்ள நினைவுடனே கைகோர்க்கும்
செயல்தானே
தெள்ளத்
தெளிவாகத் தெரிகிறது கண்டோமே
வெள்ளம்போல்
மாணவர்கள் வீறுகொண்ட பின்னாலும்!
செம்புல நீராக செயல்படுவாய்
தமிழினமே
வன்புல வடநாடு
உணரட்டும் மிரளட்டும்
உன்பலம் அறியட்டும் ஒன்றுபடு!
ஒன்றுபடு!!
தம்பலம் காட்டியே
தமிழனே வென்றுவிடு!!
புலவர் சா இராமாநுசம்
நீங்கள் சொன்னது போல் மனத்தூய்மையுடன் ஒன்றுபட வேண்டும்...
ReplyDelete
Deleteமிக்க நன்றி!
ஐயா...
ReplyDeleteமனதைத் தொடும் உணர்வுக்கவிதை படைத்திருக்கின்றீர்கள். அருமை!
மனதில் பதிந்த வரிகள்....
//செம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே
வன்புல வடநாடு உணரட்டும் மிரளட்டும்
உன்பலம் அறியட்டும் ஒன்றுபடு! ஒன்றுபடு!!
தம்பலம் காட்டியே தமிழனே வென்றுவிடு!!//
ஒன்றுபட்டு உயர்வினைத் தேடி வாழ்ந்திடும் நாளே நாமெல்லாம் உய்ந்திடும் நாள்.
பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!
த.ம.2
Deleteமிக்க நன்றி!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
ReplyDelete
Deleteமிக்க நன்றி!
செம்புல நீராக செயல்படுவாய் தமிழினமே
ReplyDeleteவன்புல வடநாடு உணரட்டும் மிரளட்டும்
உன்பலம் அறியட்டும் ஒன்றுபடு! ஒன்றுபடு!!
தம்பலம் காட்டியே தமிழனே வென்றுவிடு!!...//
மலரட்டும் தமிழீழம் உங்கள் எங்கள்
மனம் போல இந்நாளில் .உதிரட்டும்
பகைவர்கள் பலம் உருகி ஓடும் பனி போல
திரளட்டும் எங்கள் இனம் தேசத்தின் பற்று மிக !!...
மிக்க நன்றி ஐயா சிந்தையைத் தூண்டும்
சிறப்பான கவிதை வரிகள் இதற்க்கு
Deleteமிக்க நன்றி!
உண்மைதான்! தனியாக பலரும் போராடி பலனில்லை! ஒட்டு மொத்த தமிழினமும் குரல் கொடுக்க வேண்டும் உண்மையோடு! நல்ல கவிதை!நல்ல கருத்து! நன்றி!
ReplyDelete
Deleteமிக்க நன்றி!
உங்கள் அழகான தமிழ் அறைகூவல் கேட்டு தமிழினம் ஒன்றுபடட்டும்
ReplyDelete
Deleteமிக்க நன்றி!
உப்புக்கும் உதவாத ஒன்றலவா அதுவும்
ReplyDeleteதப்பிக்க மாற்றுவழி தமிழர்களே காணுங்கள்!
//ஆம் உண்மைதான் அய்யா