Thursday, November 7, 2013

காணவில்லை தமிழ்மணமே கண்டால் யாரும் – படும் கவலைகளை விரிவாக எடுத்துக் கூறும்!





காணவில்லை தமிழ்மணமே கண்டால்  யாரும் – படும்
     கவலைகளை விரிவாக எடுத்துக்  கூறும்!
போனதெங்கே சொல்லிவிட்டுப்  போனால் என்ன – இங்கே
     புலம்பபலர் செய்ததிலே பலன்தா னென்ன !
ஆனமட்டும் பலமுறையே  முயன்று  விட்டோம் –தோல்வி
      அடைந்ததன்றி முடிவாக துயரே பட்டோம்!
கானமற்ற குயிலாகிப்  பாடு  கின்றோம் –அந்தோ
      கண்மூடி  மனக்கண்ணால்  தேடு  கின்றோம்!

நல்லார்க்கு என்றுமிது  அழகா  இல்லை – நம்மை
      நம்பினார்கு  கொடுப்பதா இந்தத்  தொல்லை!
பல்லார்க்கும்  ஏமாற்றம்  ஏனோ? மாற்றம் –உண்மை
      பலரறிய  உடனடியாய் எடுத்து  சாற்றும்!
எல்லார்கும் காரணத்தை  அறியச்  செய்வீர் –மீண்டும்
      எதிர்பட்டு பழையபடி  அன்பைப்  பெய்வீர்!
இல்லார்க்கு  கொடுப்பதே  தரும   மாகும் – மனம்
       இரங்கிவந்து காட்சிதர  கவலை  போகும்!

                                புலவர்  சா  இராமாநுசம்

Wednesday, November 6, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினேழு..........



            உறவுகளே!

                      நான் முன்பதிவில்  குறிப்பிட்டிருந்த வாறு
 
ஜங்க்ஃபிரோக்கில் உச்சியில் கண்ட காட்சிகளின் எஞ்சிய  படங்களை இங்கே

காணலாம்

                                      புலவர்  சா  இராமாநுசம்




























Monday, November 4, 2013

என் முகநூல் பதிவுகள்






கொண்டாட மனமில்லை -நம்
குலமகளாம் இசைப்பிரியா
துண்டாலே உடல்மூடி -சிங்கள
துரோகிகளும் இழுத்துவர
கண்டேனே! கண்டபின்பா! -மனம்
களித்திடுமா தீபாவளி!
சண்டாளன் ஆட்சியங்கே -குலைந்து
சாயும்நாள் ! தீபாவளி !


அரசாங்கம் போடும் திட்டமெல்லாம் நடைமுறைப் படுத்தும் போது முடிவில் , மணமக்கள் மீது போடப்படும் அட்சதைப் போல ஆகிவிடுகிறது! எப்படியென்றால், விழாவுக்கு வந்தவர்கள் தம் கையில் தரப் பட்ட அட்சதையை இருந்த இடத்திலிருந்தே போடுவதால் அவர்களுக்கு முன்னால் இருப்பவர் தலைமேல் தான் விழுமே தவிர மேடையை அடைவதில்லை! மேடையில் உள்ளவர் போடுவது மட்டுமே விழும்! அதுபோல , அரசு போடும் திட்டங்கள் , பல துறைகள், பல அதிகரிகள் என அவர்தம் கைகளில் சிக்கி பலனோ, பணமோ, சிதைந்து , சுருங்கி
மக்களை அடைகிறது! அதனால் திட்டத்தின் முழுபலன் கிடைப்பதில்லை! -சொன்னவர், நேரு, சொன்ன இடம் , மக்களவை!


ஆலயம் முழுவதும் மிகவும் ஒளிமயமாக இருந்தாலும் உள்ளே சென்று , கருவறையில் ஆண்டவன் முன்னால்
ஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்து விளக்கின் சுடரைக், காணும் போது தான் நமக்குப் பக்திப் பரவசம் உண்டாகிறது

மனிதப் பிறவியில் எந்தவொரு மனிதனுக்கும் ஒழுக்கம் தான் வாழ்க்கையில் மேலான சிறப்பைத் தருவதாகும் அதனால் தானே வள்ளுவர் பெருமானும் , போனால் திரும்பி
வராத உயிரைவிட ஒழக்கம் தான் விழுப்பம்(சிறப்பு) தருமென்றார்!

அன்று ,! அண்ணா, மக்களவையில் பேசும் போது ,பிரதமர் நேருவைப் பார்த்து , ஐயா !நீங்கள் கட்டி முடிக்கப் பட்ட கோபுரம், நான் கொட்டிக்கிடக்கின்ற செங்கல் ! என்று கூறியது எவ்வளவு பெரிய, நயமான, அரசியல் நாகரீகம்!

ஆனால், இன்று !? இப்படி! காணமுடிகிறதா!!!


                                                                                               புலவர்  சா  இராமாநுசம்