Wednesday, June 1, 2011

பட்டினியால் வாடுவது வன்னிமண்



பட்டினியால் வாடுவது வன்னிமண்ணே-படம்
பாரத்தழுது சிவக்கிறது நமதுகண்ணே
எட்டுகின்ற தூரந்தான் ஈழமானால-நாம்
இருந்தென்ன பயனுன்டா சொல்லப்போனால்
வட்டமிடும் கழுகாகச் சுற்றிசுற்றி-தமிழன்
வாழாது அழிந்திட மாற்றிமாற்றி
சுட்டுதள்ள நாள்தோறும் கண்டுமிங்கே-சற்றும்
சுரனையின்றி வாழ்ந்தோமே மானமெங்கே

ஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்
இல்லாமல் நாள்தோறும் சாடசாட
வாழத்தான் வழியின்றி சிதறிஓட-நாம்
வாய்மூடி கிடந்தோமே பழியும்நாட
வீழத்தான் வேண்டுமா ஈழத்தமிழன்-இங்கே
விளங்காமல் பேசுபவன் ஈனத்தமிழன்
வேழத்தை வெல்லுமா குள்ளநரியும-வெகு
விரைவாக அன்னார்கு நன்குபுரியும்

புலவர் சா இராமாநுசம்

3 comments:

  1. வன்னித் துயர் கண்டும், காணாதது போலிருப்போருக்கு ஒரு தூண்டு கோலாக உங்களின் கவிதை அமையும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  2. தமிழர்களின் கொடுந் துயரைக் கண்டும் காணாது வாழ்வோரிற்குச் சம்மட்டியால் உச்சிப் பொட்டில் அடிப்பது போன்ற நிலையில் உங்கள் வார்த்தைகள் இங்கே தெறித்திருக்கின்றன.

    ReplyDelete
  3. ரணம் ஆகிப்போனது மனம் என் சகோதரர்கள்
    மரண செய்தி கேட்டு கேட்டு, இந்த படம் இன்னொரு சோமாலியாவை ஞாபகப்படுத்துகிறது
    நல்ல தீந்தமிழ் கவிதை ஐயா

    ReplyDelete