Wednesday, July 6, 2011

என்றும் அன்புடன்

அன்பு நெஞ்சங்களே, நேற்றைய (என்) பதிவில் தம்பி கவி அழகன்
எழுதுதிய கருத்துரையில் வந்த வரி ஒன்று மறைந்து போன என்
துணைவியின் நினைவுகளை தூண்டி விட்ட தால் அவள் முதலாண்டு
நினைவு நாளில் நான் வடித்த கவிதை இந்த பதிவாகும்

என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே

கட்டிய கணவண் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே
விட்டுப போனது சரிதானா
விதியே எனபது இதுதானா
மெட்டியை காலில் நான்போட
மெல்லிய புன்னகை இதழோட
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில முள்தைக்க
கொட்டும தேளாய் கணந்தோறும
கொட்ட விடமாய் மனமேறு்ம
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காணபதடி
செவ்வண் வாழ்ந்தோம ஒன்றாக
சென்றது ஏனோ தனியாக

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்து சென்றுவிடு
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக
இங்கே நானும தனியாக
இருத்தல் என்பது இனியாக
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி
செய்வாயா--

                       புலவர் சா இராமாநுசம்

15 comments:

  1. ஐயா மன்னிக்கணும் உங்கள் வேதனையான நினைவுகளை கிளரிவிட்டதுக்கு
    சின்ன பிள்ள தனமா கருத்து தெரிவிசிட்டனோ என்று நெஞ்சுக்க உறுத்துது
    கவிதையை வாசிக்க வாசிக்க கண்கள் கனக்கிறது

    ReplyDelete
  2. கண்களில் கண்ணீரை
    தவிர்க்க முடியவில்லை
    மனிதத்தின் மரணம் போல
    அருமையான கவிதை
    என்று ரசிக்க
    முடியாமல்
    உங்களின் சோகம்
    என்னை முழுவதுமாய்
    ஆக்கிரமிக்கிறது

    ReplyDelete
  3. மனம் கனக்கச் செய்துபோகும் பதிவு
    எப்படிச் சொல்வது என்ன சொல்வது எனத் தெரியவில்லை
    இது பரமன் செய்த அ நீதி..
    ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை...

    ReplyDelete
  4. கவிதை படிக்கும் போதே மனம் வேதனையால் துடிக்கிறது.. வழிகள் நிறைந்தக் கவிதை..

    ReplyDelete
  5. இருப்பதும் அகல்வதும் இயற்கையின் இரு விதி என்று அவருடன் செலவிட்ட தருணங்களால் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் என்பதன்றி வேறென்ன சொல்லிவிட முடியும்?

    ReplyDelete
  6. விதியின் வழி என்று தெரிந்து கொண்ட அறிஞர் நீங்களே கலங்கலாமா துயரங்கள் மனிதகுலத்தின் இயல்பு மாற்றல் தகுமா புலவரே! மீண்டுவாருங்கள் ஐயா!

    ReplyDelete
  7. கருத்துரை இட்டு ஆற்றுப் படுத்திய அனைத்து
    அன்பு நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த நன்றி
    அன்புள்ள
    இராமாநுசம்

    ReplyDelete
  8. //எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
    என்னையும அழைத்து சென்றுவிடு //
    மனைவியின் மீது கொண்ட அன்பும்,பிரிவின் துயரும் புலப்படுத்தும் அருமையான வரிகள்!

    ReplyDelete
  9. ஐயா வலிக்கிறது ...
    எனது அனுதாபங்களும்.....
    கலங்காதீர்கள்.....

    ReplyDelete
  10. மனம் கனத்தது. அவர் ஆன்மா தன் பாதியை விட்டுப் பிரியுமா என்ன. மரணத்தாலும் பிரிக்கமுடியாத நினைவில் வாழ்கிறார் தங்கள் துணைவி.

    ReplyDelete
  11. புலவர் சா இராமாநுசம் said...
    கருத்துரை இட்டு ஆற்றுப் படுத்திய அனைத்து
    அன்பு நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த நன்றி
    அன்புள்ள
    இராமாநுசம்

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா, மனைவியைப் பிரிந்த புலவனின் உள்ளத்து உணர்வுகளைத் தாங்கி, நினைவு மீட்டல் கலந்து உங்கள் கவிதை வந்திருக்கிறது.

    ReplyDelete
  13. நினைவிருந்து வந்த நிரூபனுக்கு நன்றி

    இராமாநுசம்

    ReplyDelete
  14. //எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
    என்னையும அழைத்து சென்றுவிடு
    அங்கே ஆகிலும் ஒன்றாக
    அன்புடன் வாழ்வோம் நன்றாக//

    கவி அருமை ஐயா.பிரிவின் வலி எவ்வளவு கொடுமை என்பதை அறிவோம் ஐயா.உங்கள் மீது அன்பு கொண்ட உங்கள் துணைவி என்றும் உங்கள் உள்ளத்திலே நிறைந்திருப்பார்.

    ReplyDelete
  15. சித்தாரா மகேஷ். said

    நன்றி சகோதரி
    உங்கள் முதல் வருகைக்கும் நன்றி

    இராமாநுசம்

    ReplyDelete