Saturday, September 6, 2014

உளருவாயன் தன்னைவிட ஊமையன் மேலாம்! –என்ற உண்மைதனை உணர்த்தவந்த, உத்தமரே ! போலாம்!




குமரியைக் கேரளாவுடன் சேர்ப்பேன் என்றே-குழம்பி
கூறுகின்றார் பொன்னரவர் அமைச்சர் இன்றே
எமதருமைத் தமிழரிவர் ! என்னே! என்னே !-உலகில்
எங்கேயும் காணாத பிறவி முன்னே!

உளருவாயன் தன்னைவிட ஊமையன் மேலாம்! –என்ற
உண்மைதனை உணர்த்தவந்த, உத்தமரே ! போலாம்!
களறுநிலம் பாடுபட்டும் பயிர்விளைதல் ஆகா !-பிரதமர்
கண்டுவுடன் நீக்காவிடில் தீமையென்றும் போகா!

ஊதுகின்ற சங்கையிங்கே ஊதிவிட்டோம் நாமே-இதை
உணர்ந்து, நடப்பதினி ஆள்வந்தார் தாமே!
சாதுமிரண்டால் காடுகொள்ளா..! பழமொழிதான் அறிவீர்!- தமிழன்
சாதுதான்! மிரண்டுவிட்டால் …?நாடுகொள்ளா..! புரிவீர்!

புலவர் சா இராமாநுசம்

9 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இதென்ன ,உண்ட வீட்டுக்கு துரோகமா ?
    த ம 2

    ReplyDelete
  3. பொருத்தமான தலைப்பு ஐயா.

    ReplyDelete
  4. அப்படிச் செய்தி இருக்கிறதா என்ன? நான் பார்க்கவில்லையே...

    ReplyDelete
  5. அமைச்சரின் பேச்சு கண்டிக்கத் தக்கது ஐயா

    ReplyDelete
  6. புலவர் ஐயா,

    தமிழ்நாட்டிலுள்ளவர்கள் யாராவது அந்தக் கருத்தை எதிர்க்க மாட்டார்களா என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். “உளருவாயன் தன்னைவிட ஊமையன் மேலாம்” என்று கவி பாடியே அவரது தலையில் ஓங்கியொரு குட்டுக் கொடுத்து விட்டீர்கள். உங்களைப் பாராட்டுமளவுக்கு எனக்கு வயதில்லை, அதனால் ஈழத்தமிழர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  7. பல சமயங்களில் பேசுவது என்ன என்றே இந்த அரசியல்வாதிகளுக்கு நினைப்பு இல்லையோ எனத் தோன்றுகிறது...

    ReplyDelete