Tuesday, June 2, 2015

முடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும் முடியவில்லை என்றாலும் முயல வேண்டும்!



முடிந்தவரைப் பிறருக்கு உதவ வேண்டும்
முடியவில்லை என்றாலும் முயல வேண்டும்!
கடிந்தொருவர் பேசினாலும் பொறுத்தல் வேண்டும்
கண்ணியமாய் அவர்பிழை உணர்த்த வேண்டும்!
வடிந்துவிடும் வெள்ளமென வந்தக் கோபம்-உடன்
வற்றிவிட அவர்நிலையோ பார்க்கப் பாபம்!
விடிந்தவுடன் இருளோடி போதல் போன்றே –அவர்
வெட்கமுற தலைசாயும் நிலையே சான்றே!


புலவர் சா இராமாநுசம்

21 comments:

  1. விடிந்தவுடன் இருளோடி போதல் போன்றே –அவர்
    வெட்கமுற தலைசாயும் நிலையே சான்றே!//
    அழகாய்ச் சொன்னீர்கள் ஐயா
    தம 2

    ReplyDelete
  2. –அவர்கள் வெட்கமுற்று தலை சாயும் நிலையைகடந்து விட்டார்கள் அய்யா........

    ReplyDelete

  3. கடிந்தொருவர் பேசினாலும் பொறுத்தல் வேண்டும்
    கண்ணியமாய் அவர்பிழை உணர்த்த வேண்டும்!
    வடிந்துவிடும் வெள்ளமென வந்தக் கோபம்-உடன்
    வற்றிவிட அவர்நிலையோ பார்க்கப் பாபம்!

    மன அழுத்தத்தை மாய்க்க தந்த அரும் மருந்து
    அழகிய இந்தக் கவிதை!
    அனைவரும் அருந்த வேண்டிய "டானிக்" கவிதை!
    அற்புத வரிகள்! ரசித்தேன்!
    கடைபிடிக்க முயன்று, வெற்றியை பெறுவேன்!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. அருமையான சிந்தனை ஐயா சமீப காலமாக எனக்கு வரும் பெயரில்லா கருத்துரையாளரிடம் நான் நடந்து கொள்ளும் விதத்தை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது எனது செயல்பாடு தங்களது சிந்தனையில் கவிதையாய்.... சந்தோஷமாகவும் இருக்கின்றது ஐயா.

    தமிழ் மணம் முதலாவது காலையில்....

    ReplyDelete
  5. எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய சிந்தனை

    ReplyDelete
  6. கண்ணியமாய் அவர் பிழை உணர்த்த வேண்டும்
    அனுபவ வரிகள் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  7. பட்டறிவின் பக்குவங்கள் கற்றறியப் பாப்புனையும்
    நற்றவமே உந்தன் நடை!

    அருமை ஐயா

    தொடர்கிறேன்!

    நன்றி

    ReplyDelete
  8. பிழை பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது சரியான எண்ணம் :)

    ReplyDelete
  9. வணக்கம்
    ஐயா

    சிந்தனையுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. அழகான சிறு கவிதை. அருமை!
    த ம 10

    ReplyDelete
  11. நாசுக்கான வரிகளை மற்றவர்களை எதிர்கொள்ளும் முறையைத் தாங்கள் பகிர்ந்தவிதம் அருமை.

    ReplyDelete
  12. அழகான அருமையான கவிதை ஐயா!

    ReplyDelete