Tuesday, September 1, 2015

உழுவாரே உலகத்து அச்சாணி என்றே-நன்கு உணர்ந்திட்ட பாரதப் பிரதமரும் இன்றே!


உழுவாரே உலகத்து அச்சாணி என்றே-நன்கு
உணர்ந்திட்ட பாரதப் பிரதமரும் இன்றே!
வழுவான சட்டத்தைத் திரும்பவேப் பெற்றார்-உழவர்
வாழ்ந்திட ! மனமாற புகழ்தன்னை உற்றார்!
அழுவாராய் ஓயாது கண்ணீர் விட்டே-கடல்
அலைப்பட்ட துரும்பாக அல்லல் பட்டே!
எழுவாரா என்றநிலை முன்பே உண்டாம்- அவர்
ஏற்றமுற , யாதுவழி ஆய்தல் தொண்டாம்!


நம்நாடு விவசாய நாடும் அன்றோ!-ஆனால்
நாடாள எவர்வரினும் உணர்தல் என்றோ?
தும்போடு ஓடவிட்டு வாலைப் பற்றி – மாட்டை
துரத்துகின்ற நிலைவிட்டு சட்ட மியற்றி!
தெம்போடு பாடுபட மத்திய அரசும்-திட்டம்
தீட்டியதை செயல்படுத்த மாநில அரசும்!
தம்நாடு இதுவென்றே உழவர் எழுவார்-எவரும்
தம்நிகர் இல்லையென நாளும் உழுவார்

புலவர் சா இராமாநுசம்

16 comments:

  1. ஏரோட்டம் நின்று போனால் அனைத்து ஓட்டமும் நின்று போகும் ஐயா...

    ReplyDelete
  2. வேறு வழியின்றி இப்போதைக்கு திரும்பப் பெறப் பட்டுள்ளது ,வேறு வடிவில் இந்த சட்டம் வரலாம் !

    ReplyDelete
  3. நம்நாடு விவசாய நாடு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் ஐயா.

    ReplyDelete
  4. உழவுத் தொழிலின் சிறப்பை அருமையாகப்
    பாடினீர்கள் ஐயா! வாழ்த்துக்கள்!

    த ம 6

    ReplyDelete
  5. உழவுத் தொழில் இல்லையேல் இந்த உலகமே இல்லையே ஐயா!!!

    இந்தியாவின் முதுகெலும்பாய் இருக்கும் உழவு நலிந்து வருகின்றது வேதனையான ஒன்று.

    அருமையான வரிகள் ஐயா..உழவுக்கு வந்தனை செய்வோம்...னம் தலைவர்கள் அதை உணர்ந்தால் நல்லதே.....

    ReplyDelete
  6. அருமை ஐயா அருமையான வரிகள் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  7. இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்
    அருமை

    ReplyDelete
  8. அன்புள்ள புலவர் அய்யா,

    விவசாயி நலனில் அக்கறை கொண்டு பாடல் இயற்றினீர்...!அருமை...!

    நடுவண் அரசு நடுவனாய் இருந்து செயல்படுமா...?

    நன்றி.
    த.ம,.9

    ReplyDelete
  9. வணக்கம் புலவர் ஐயா !

    ஊர்விட்டுப் போனாலும் உழவன் கையில்
    ..........உயிரெழுத்தாய் வாழ்கின்ற உழைப்பின் எச்சம்
    ஏர்பட்ட இரேகைகளின் இடுக்கில் காணும்
    .........ஏக்கத்தில் மறைந்திருக்கும் ! என்னே செய்வோம் ?
    சீர்கேட்ட மானிடத்தின் சிறப்பைக் கூறும்
    ..........சீர்திருத்த வாதிகளின் பேரா சையில்
    நீர்முட்டி நிலம்செளித்த வாய்க்கால் காயும்
    .........நிலமாதும் தலைவெடித்துச் சாபம் போடும் !

    அருமையான கவிதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் நன்மையே .....! தொடர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

    ReplyDelete