Tuesday, March 21, 2017

ஏனோ தானோ என்றேதான்-நாளும் நடப்பது நன்றோ!? தமிழ்மணமே!




ஏனோ தானோ என்றேதான்-நாளும்
நடப்பது நன்றோ!? தமிழ்மணமே
தேனாய் இனித்திட பதிவுகளை-முறையாய்
தினமும் பட்டியலை தருவாயே
ஆனால் என்னவோ ஆயிற்றி—வீணாய்
அம்முறை முற்றிலும் மாறிற்று
நானே அனுப்பிய பலபதிவை-ஏற்றும்
பட்டியல் தன்னில் பதிவில்லை!


புலவர் சா இராமாநுசம்

11 comments:

  1. முகப்புப் பட்டியலில் இடம்பெறும் பதிவுகள் நகராமல் மணிக்கணக்கில் அப்படியே நிற்கின்றன.

    புதிதாக இணைக்கப்படும் பதிவுகள் முகப்புப் பக்கத்தில் காட்சியளிக்காமல் நகர்ந்து அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்றுவிடுகின்றன.

    சூடான இடுகைகள் நிலையும் இதுதான்.

    தானியங்கியில் நேர்ந்துள்ள இந்தப் பழுதைச் சரி செய்யும்படி பலமுறை தமிழ்மணத்துக்கு வேண்டுகோள் நான் வைத்தும் பலனில்லை.

    ReplyDelete
  2. ஆம் நண்பரே! ஆகவேதான் அனைவரும் அறிய கவிதை இயற்றினேன்!தமிழ் மண நிர்வாகம் கவனித்து ஆவன இனியாவது செய்யுமா?

    ReplyDelete
  3. ஐந்தாண்டுகளுக்கு முன் 'போனாய் எங்கே தமிழ்மணமே?'என்று கவி பாடினீர்கள் ,புத்துணர்ச்சியுடன் தமிழ்மணம் வந்தது !
    இப்போதும் அப்படியே நடக்குமென்று நம்புகிறேன் அய்யா :)

    ReplyDelete
  4. தமிழ்மணத்தை நிர்வகிக்க ஆளில்லாமல் தானாய் ஓடிக்கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  5. அதன் போக்கு சித்தன் போக்கு போன்றது ஐயா.

    ReplyDelete
  6. மனம் போன போக்கில் 'போ'வது தமிழ் மன'து' ஆகாது தமிழ் மணமு மாகா'து'.

    ReplyDelete
  7. தன்னார்வலர்களை மட்டுமே கொண்டு இயங்கும் எந்த நிறுவனமும் இப்படித்தான் ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன். தமிழ்மணம் தனக்கு வருமானத்திற்கு ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும்.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  8. தமிழ் மனம்
    யாரேனும் பொறுப்பை மேற்கொண்டு
    சீரமைப்பது நன்று

    ReplyDelete
  9. ஏதோ ஒரு திரட்டியாவது ஓரளவில் செயலில் இருக்கிறதே

    ReplyDelete