Thursday, July 13, 2017

உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த உணவின் சுவையும் துறந் தாச்சே



ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப் பாவே
    தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத் தில்
    தானாய் வந்தது அலை போல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலை போல
    வானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனை கள்  

    உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்  பூவே
    போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலை பெற்றேன்
    பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்த துவே

    பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதி டுவேன்
    வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்தி டிமே
    தேதி கேட்டால தெரி யாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரி யாதே
    காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை

    படுத்த படிய சிந்திப் பேன்-என்
    பக்கத் தில் பேனா தாளுமே
    தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறை  வில்லை
    அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணா தாம்
    எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயா தாம்

    அப்பா  வேதனை ஆம்  அப்பா-தினம்
    ஆனது என் நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப் பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப் பாவே
    ஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்
    இப்பா போதும் முடி யப்பா-சோர்வு
    எழவே தொடரா படி யப்பா

              புலவர் சா இராமாநுசம்

10 comments:

  1. வலைக்காதல் பிரமிக்க வைக்கிறது ஐயா...

    ஆர்வம் தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. எல்லோருக்கும் இந்நிலை வரும் ஐயா காரணம் புலி வாலை பிடித்த நிலை.

    மனம் அமைதியாகும் பொழுது கவிதை வடியுங்கள்.

    ReplyDelete
  3. உங்கள் ஆர்வம் எங்களுக்கும் தொற்றிக் கொள்கிறது.

    ReplyDelete
  4. வலைக் காதல் தொடர்ந்து
    வளர வாழ்க என வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  5. தவியாய் தவித்த போதும் நீண்ட கவிதை வடித்து விட்டீர்களே அய்யா :)

    ReplyDelete
  6. பிரமிக்க வைக்கும் ஆர்வம்.... தொடரட்டும். நாங்களும் தொடர்கிறோம் புலவர் ஐயா.

    ReplyDelete
  7. வலையி எழுதுவதே காதல்தான் ஆனால் தெரியுதே அளவுக்கு மீறினால் நஞ்சே

    ReplyDelete
  8. அய்யாவுக்கோ தமிழுண்டு-கவி
    ஆற்றும் திறனோ மிகவுண்டு
    மெய்யாய்த் தோன்றும் உணர்வுண்டு-பலர்
    மெச்சும் யாப்பின் சிறப்புண்டு
    பொய்மையில்லாக் கருத்துண்டு-பிறர்
    போற்றும் வார்த்தைச் செறிவுண்டு
    நெய்வீர் கவிதை தமிழ்கொண்டு-அதை
    நேசிப்போரோ பலருண்டு

    ReplyDelete
    Replies
    1. சேட்டைக்காரன் திறன் கண்டேன்-அவர்
      சிந்தனைத் தேனை நான் உண்டேன்!

      Delete