Friday, September 22, 2017

மழையே மழையே வாராயோ-எங்கள் மனம்குளிர் நல்மழைத் தாராயே





மழையே  மழையே வாராயோ-எங்கள்
   மனம்குளிர் நல்மழைத் தாராயே
அழையார் வீட்டுக்குப்  போகின்றாய்-நாங்கள்
   அழைத்தும்  வராது ஏகின்றாய்
விழைவார் தம்மிடம் போகாமல்-நாளும்
   வேதனைப்  பட்டு  சாகாமல்
பிழையார் செய்தார்? பொறுப்பாயா –உந்தன்
   பிள்ளைகள் எம்மை வெறுப்பாயா!!?
புலவர்  சா  இராமாநுசம்

5 comments:

  1. மழை வரும் சூழ்நிலை தெரிகிறது அய்யா :)

    ReplyDelete
  2. மழையை நாங்களும் வரவேற்கிறோம்....

    ReplyDelete
  3. நம்புவோம் ஐயா மழை வரும்
    த.ம.பிறகு

    ReplyDelete
  4. நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நிச்சயம் மழை வரும் ஐயா!

    ReplyDelete
  5. வானிலை அறிக்கை மையம் மழை வரு ம் என்றால் வராது வராது என்றால் வரலாம்

    ReplyDelete