நானா நீயா பாரென்றே
நடத்திய மத்திய அரசின்றே
வீணாய் தம்முள் தாம்சாடி
விரையம் ஆகிடப் பலகோடி
காணோம் ஏதும் பலனொன்றே
கடமை கண்ணியம் நிலையின்றே
ஏனாம் இந்த இழிநிலையே
எண்ணிப் பார்க்கவும் வழியிலையே
புற்று நோயாம் ஊழலிங்கே
போனது என்றால் ஒழிவதெங்கே
உற்றுப் பார்த்தால் மனிதரிலே
ஊழல் செய்யாப் புனிதரிலே
மற்றவர் செய்தால் ஊழலெனல்
மறைப்பார் ஊழல் தம்மதெனில்
கற்றவர் அறிந்தே செய்கின்றார்
கல்லார் அறியாது செய்கின்றார்
முடங்கிப் போனதே அவையிரண்டும்
முறையா சரியா படை திரண்டும்
அடங்கிப் போனதே பலனென்ன
அழிந்ததுப் பணமே கோடியன்ன
திடமொடு ஆய்து முடிப்பீரோ
திரும்பவும் அமளிக்கு விடுப்பீரோ
நடந்தது நடந்ததாய் போகட்டும்
நல்லது எதுவோ ஆகட்டும்
அனைத்து மக்களும் வெறுப்பானார்
அமளிக்கி அனைவரும் பொறுப்பானார்
நினைத்துப் பார்க்கவும் கூசிடுமே
நிம்மதி கெட்டே ஏசிடுமே
தினைத் துணையளவில் எளிதாக
தீர்த்திட முயலல் வழியாக
பனைத் துணையளவு பெரிதாக
பரவ வளர்த்து தவறன்றோ?
புலவர் சா இராமாநுசம்
அழகான சொற்களால்
ReplyDeleteஅரண் கட்டி
ஆகமம் படைக்கும் கவிதை..
ஊழலின் பின்னே ஓடியலைந்து
விவேகமற்ற செயல்களுக்காய்
அவைகளை ஒத்திவைத்து
நாட்டின் முன்னேற்றத்தை
தடுத்தாலும் நடவடிக்கைகள் செய்யும்
அரசிற்கொர் இடித்துரைக்கவிதை...
அருமை புலவரே.
ஐயா கவிதையிலும் அரசியலா? நம்மாளுங்க அதெயெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.... அமளி இல்லாம கூட்டம் நடந்தா அது அரசியல்வாதிக்கு அழகல்ல....
ReplyDeleteவாசிக்க:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: பெண்களின் அரட்டை வித் டிப்ஸ் கச்சேரி
//புற்று நோயாம் ஊழலிங்கே
ReplyDeleteபோனது என்றால் ஒழிவதெங்கே
உற்றுப் பார்த்தால் மனிதரிலே
ஊழல் செய்யாப் புனிதரிலே
மற்றவர் செய்தால் ஊழலெனல்
மறைப்பார் ஊழல் தம்மதெனில்
கற்றவர் அறிந்தே செய்கின்றார்
கல்லார் அறியாது செய்கின்றார் //
ஊழலில் தோய்த்தெடுத்த உடம்பு வளர்க்கும் மனிதர்க்கு எத்தனை சொன்னாலும் உறைக்கமறுக்கிறதே.... விதியை நொந்து வீணே போகாமல் மனம் நொந்து கவிதை படைத்தீர். உரைத்த யாவும் உண்மையே எனினும் எடுபடுமோ அவரிடம் நியாயமும் நேர்மையும்?
//அனைத்து மக்களும் வெறுப்பானார்
ReplyDeleteஅமளிக்கி அனைவரும் பொறுப்பானார்//
உண்மைதான். பாராளுமன்ற செய்திகளை படிப்பதைவிட உள்ளுர் அடிதடி செய்திகளை படிக்கலாம்.
அருமையான கவிதை.
ReplyDeleteநன்றி ஐயா.
எல்லாம் வியாபாரமாகிப்போன உலகில் அரசியல் ஊழல் என்றே ஆகிவிட்டது ஐயா.இனி அதை மாற்றவது பெரிய ஒரு கேள்விக்குறியே !
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவிழிப்புணர்வு கொடுங்கள்... அனைவரும் விழித்தெழுவோம்..
ReplyDeleteஅழகிய கவிதை
ReplyDeleteஅய்யா, நீயா? நானா? பார் என்றே என வெச்சிருந்தீங்கண்ணா டைட்டில் கலக்கலா , டைமிங்கா இருந்திருக்கும். ஆனாலும் கருத்து கலக்கல்
ReplyDeleteஇந்த நாசமா போன நடுவனரசு அடுத்த நாட்டுக்காரனுக்கு “மாமா” ( நம்ம நாட்டை கூட்டிக் கொடுப்பவனை வேறென்ன சொல்ல?) வேலை பாக்குறதலயே குறியா இருக்கு.
ReplyDeleteகுடிமக்களை குட்டிச்சுவராக்கும் முயற்சியை ”கை” விடச் சொன்னா கசக்குது.
அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா....!!!
ReplyDeleteஅழகிய கவிதை
ReplyDeleteநயமாகச் சொன்னீர்கள் புலவரே.
ReplyDeleteArumai Ayya.
ReplyDeleteஅசத்தலான கவிதை..
ReplyDeleteசெவிடன் காதில் ஊதிய சங்கு!
ReplyDeleteநல்ல கவிதை... ஆனால் சென்னை பித்தன் ஐயா சொன்னது நிஜம்... :(
ReplyDeleteஅருமையான, அழகான கவிதை சார்!
ReplyDeleteஇதையும் படிக்கலாமே:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"