Saturday, July 29, 2017

கொடியது கேட்கின் எனதரும் உறவே கொடிது கொடிது தனிமை கொடிது!

கொடியது கேட்கின் எனதரும் உறவே
கொடிது கொடிது தனிமை கொடிது
அதனினும் கொடிது முதுமையில் தனிமை
அதனினும் கொடிது மனைவியின் பிரிவு
என்நிலை அதுவே எழுதினால் பதிவே
தன்நிலை தவறின் விளைவது எதுவே
கொடியது கேட்கின் எனதரும் உறவே
கொடிது கொடிது தனிமை கொடிது


புலவர் சா இராமாநுசம்

Friday, July 28, 2017

மீண்டும் தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்!

தமிழ்மணத்திற்கு  ஒரு  வேண்டுகோள்\

      என்னுடைய  பதிவுக்கு  பலபேர்  ஓட்டு  அளிப்பதில்
சிக்கல்  உள்ளதாக தெரிகிறது  அன்புகூர்ந்து  தமிழ்  மணம்
கவனித்து  அச்  சிக்கலை  நீக்க  வேண்டுகிறேன்
      ஓட்டு அளிக்கும் உறவுகளே நீங்கள்  ஓட்டளிக்கும் அதன்
எண்ணை யும் மறு  மொழில் தவறாமல்   குறிப்பிடவும்  வேண்டுகிறேன்

புலவர்  சா  இராமாநுசம்

என் முகநூலில் வந்தவை!
மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் திரண்டு ஓடிவர
வரமே பெற்று வாழ்வோமே-அன்னார்
வருந்திட புகழ்தனில் சூழ்வோமே
தரமே திலைத்திட நற்பெயரே-எடுக்க
தருவோம் நம்முடை இவ்வுயிரை

புலவர் சா இராமாநுசம்

தற்போது தமிழக அரசின் நிலை , திருடனுக்குத் தேள்
கொட்டியது போன்றது தானே
என்ன?நான் சொல்வது சரிதானே!


திருடப்போன இடத்தில் தேள்
கொட்டினால் ஐயோ என்றா
கத்த முடியும் அதுபோலத்தான்
நம் வாழ்க்கையில் சில நிகழ்வுகள், வாய் விட்டு
சொல்ல முடியதனவாக அமைந்து விடுகிறது


இனி ,சில நாட்களுக்கு அரசியல்
பதிவுகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு
இலக்கிய இன்பம் பற்றி எழுதுகிறேன்


அன்னை வையிற்றில் உருவானோம்-எரியும்
அக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்து போனோமா
(சொல்லுங்கள்)
 
 
 

Thursday, July 27, 2017

கேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக் கேடுநீங்கி ஒளிபரவ அறியும் உலகும்!
ஆட்டுவது பா.சா க வடவர் நாடு-அதன்படி
ஆடுவது இடப்பாடி அடடா கேடு
நாட்டுநிலை காட்டலது உண்மை தானே-விரைவில்
நாடறியும் திரைவிலகும் அறிவார் தானே
ஓட்டுதனை கேட்டவரும் வருவார் ஒருநாள்-அன்றே
ஓட்டிடுவீர் !விரைட்டிடுவீர்! அதுவே திருநாள்
கேட்டிதனை நடப்பீரேல் இருளும் விலகும்-இந்தக்
கேடுநீங்கி ஒளிபரவ அறியும் உலகும்!


புலவர் சா இராமாநுசம்

Wednesday, July 26, 2017

நீங்காது மனதினிலே அலைபோல் மோத!

நீங்காது மனதினிலே அலைபோல் மோத
நிலையின்றி பல்வகையும் நினைவில் ஓத
தூங்காத விழியிரண்டும் துணையாய் நின்றே
தொலையாத இரவுதனை தொலைத்தேன் நன்றே
தாங்காது தவிப்பதும் எத்தனை நாளோ
தடமறியா என்நெஞ்சை அறுக்கும் வாளோ
ஏங்காது வாழ்கின்ற நாளும் வருமா
எல்லையின்றி ஓர்முடிவை விரைவில் தருமா


புலவர் சா இராமாநுசம்

Tuesday, July 25, 2017

கானில் உயரும் மரம்போல-உந்தன் கருணை எனக்கே உரம்போல!

நானும் தந்திடும்  தொல்லைகள-ஏற்று
 நலம்தரும் உனக்கோர் எல்லையில
தேனும் இனிப்பதே  அதன்குணமே-நன்றி
  தெரிவித்தேன் வாழ்க  தமிழ்மணமே
வானும் கடலும்  உள்ளவரை-நீயும்
 வளர வேண்டுதல்  எந்தனுரை
கானில்  உயரும்  மரம்போல-உந்தன்
  கருணை  எனக்கே  உரம்போல

புலவர்  சா  இராமாநுசம்

Monday, July 24, 2017

தமிழ்மணத்திக்கு ஒரு வேண்டுகோள்


தமிழ்மணத்திற்கு  ஒரு  வேண்டுகோள்\

      என்னுடைய  பதிவுக்கு  பலபேர்  ஓட்டு  அளிப்பதில்
சிக்கல்  உள்ளதாக தெரிகிறது  அன்புகூர்ந்து  தமிழ்  மணம்
கவனித்து  அச்  சிக்கலை  நீக்க  வேண்டுகிறேன் 
      ஓட்டு அளிக்கும் உறவுகளே நீங்கள்  ஓட்டளிக்கும் அதன்
எண்ணை யும் மறு  மொழில்  குறிப்பிடவும்  வேண்டுகிறேன்

புலவர்  சா  இராமாநுசம்


கண்ணென வளர்க்கும் நாள்போலும்-என்றும் கவிதைகள் தந்திட மேன்மேலும்
உண்ணும் உணவா உறவுகளே-என்னை
உங்கள் மறுமொழி வரவுகளே
கண்ணென வளர்க்கும் நாள்போலும்-என்றும்
கவிதைகள் தந்திட மேன்மேலும்
திண்ணம் இதுவென நம்புங்கள்-உணர்ந்து
தெளிவீர் எனக்கது தெம்புங்கள்
எண்ணம் பல்வகை தோன்றிடுமே-அதனால்
எழுத்தில் மனமது ஊன்றிடுமே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...