கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
நிம்மதி ஏற்பட செய்வீரா?
பட்டப் பகலில் வங்கியிலே-பெரும்
பணமே கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!
வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
வாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
அல்லல் பட்டே சாகின்றான்!
இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
இரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
நீங்கா கறையே கொள்வீரே!
புலவர் சா இராமாநுசம்
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
ReplyDeleteநீங்கா கறையே கொள்வீரே!
கவிதை அருமை ஜயா
சட்டம் ஒழுங்கை சீர்குழைக்கும்
ReplyDeleteசெயல்களை நீங்கள்
பட்டியலிட்டது யதார்த்தம் ஐயா..
இன்றைய சூழ்நிலை இதுதான்...
அரசு வேடிக்கை பார்ப்பதை விடுத்து
ஒழுங்கு நடவடிக்க எடுக்கவேண்டும்
என்ற இடித்துரைக் கவிதை
அருமை ஐயா...
பட்டப் பகலில் வங்கியிலே-பெரும்
ReplyDeleteபணமே கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறது!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!
.....................
அருமையான வரிகளைப் பின்னி ஒரு
தேவிமிகு கவிதையினை உங்கள் வலைத்தளத்தில்
பகிர்ந்தமைக்கு பாராட்டுகள் ஐயா.
நிகழும்
ReplyDeleteநிகழ்வுகளை
நிதர்சனமாய்
நிலை
நிறுத்திய
நிகரில்லா பதிவு அய்யா அருமை.
\\\நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
ReplyDeleteநீங்கா கறையே கொள்வீரே!\\\ மிகச் சரி .
இனிய மாலை வணக்கம் ஐயா,
ReplyDeleteஅநீதிகளைக் கண்டு பாராமுகமாய் இருப்போர் பற்றிப் பேசும் விருத்தக் கவிதையினை வீறாப்புடன் தந்திருக்கிறீங்க.
மக்கள் மனம் ஒரு நாள் நிச்சயமாக மாறும், அநீதிக்கு எதிராக எழும் என்பதில் ஐயமில்லை.
அன்றாட நாட்டு நிகழ்வுகளை வேதனையுடன் கவிதையாக்கி இதயம் கனக்க விட்டுவிட்டீர்கள் புலவரே!
ReplyDelete//இலையதை தடுத்திடும் எண்ணமே-ஆளும்
ReplyDeleteஇரண்டு அரசுக்கும் திண்ணமே
நிலையிது! முறையா? சொல்வீரே-எனில்
நீங்கா கறையே கொள்வீரே!//
அருமை ஐயா ..
எந்த அரசுகள் வந்தாலும் நம் நிலைமை மாறுவதில்லை
என்பது வேதனை :(
நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் ஏற்ற கவிதைகள் புனைய உங்களுக்கு ஈடு இலை..
ReplyDeleteநல்ல கவிதை....
'..இலையதை தடுத்திடும் எண்ணமே!...''
ReplyDeleteஎதற்காக அரசு தெரியலையே!...
என்று இந்நிலை மாறுமென்பதும் தெரியலையே!
நல்ல வரிகள் பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
நல்ல கவிதை.
ReplyDeleteவேதனையான நிலை தான்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று முழங்கியவரெல்லாம் மக்கள் வாழ்வே மகேசன் வாழ்வு என்று எண்ணும் காலம் என்று வருமோ? வேதனை உரைத்த விதம் வெகுநன்று ஐயா.
ReplyDeleteகவிதையின் கருத்து மனதில் பதிந்தது. அவசியம் சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயத்தை வருத்தமுடன் கவி பாடியிருக்கிறீர்கள். இந்நிலை மாறும் என்றும் நம்புவோம்!
ReplyDeleteபட்டப் பகலில் வங்கியிலே-பெரும்
ReplyDeleteபணமே கொள்ளை போகிறது
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறது!
இப்படித்தான் நடக்கிறது அரசு என்ன செய்கிறது என்று தெரியவில்லை..வாசித்தேன் வாக்கிட்டேன் நன்றி ஐயா.
Arumaiyana thevaiyana kavithai Ayya!
ReplyDeletetha. ma. 10.
ReplyDeleteநாட்டின் நிலைமையை தெளிவாக ஆதங்கமுடம் கூறும் அருமையான கவிதை ஐயா!
ReplyDeleteArumaiyana kavithai iya kodumaIkal adchi seium naadu
ReplyDeleteரிஷபன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
கா ந கல்யாணசுந்தரம் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
.R.ராஜகோபாலன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
நிரூபன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
தனிமரம் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
jayaram thinagarapandian said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
kavithai (kovaikkavi) said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
Rathnavel Natarajan said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
மதுமதி said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
துரைடேனியல் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
ஷைலஜா said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
கவி அழகன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
சா இராமாநுசம்
நாட்டு நடப்புகளை கவிதையில் சொல்லிவிட்டீர்கள்.
ReplyDeleteஉடன்
ReplyDeleteகொடுமைக்கு முடிவு எடுப்பீரே!
உடனடியாக கவனத்தில் கொண்டு முடிவுக்கு வரட்டும் அநியாய கொடுமைகள்..
வலைதனை கொண்டே தினத்தோறும்-தன்
ReplyDeleteவாழ்வை நடத்திட கடலோரம்
அலைதனைத் தாண்டிச் செல்கின்றான்-மீனவன்
அல்லல் பட்டே சாகின்றான்!
உங்கள் கவிதையில் இருக்கும் யதார்த்தம் அருமை ,,,,,,,,,,,,