முன்னாள் மேலவை உறுப்பினர் முனைவர் இரா சனார்தனம்
அவர்களின் எழுபத்து, ஐந்தாண்டு பிறந்த நாள் வாழ்த்துப்பா!
இவர் தமிழகத் தமிழாசிரியர் கழகத்திற்கு ஆற்றியுள்ள தொண்டு
என்றும் போற்றத் தக்கது! அரசியலே வாழ்வாகக் கொண்ட இவர்
கறைபடா கரத்திற்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது!
அன்புதரும் பண்பாளர் முனைவர் சனா-அவர்
அரசியலே வாழ்வாக கொண்டார் ஆனா
என்பும்தரும் பெருந்தன்மை குணமே
பெற்றார்-வாழ்வில்
எள்ளவும் ஊழலிலா தூய்மை உற்றாரf
துன்புவரும் போதுமவர் துவள மாட்டார்-எண்ணித்
தொடங்கியதை முடிக்காமல் ஓய்வே காட்டார்
இன்புதரும் எழுச்சிதரும் எண்ணும் தோறும்-என்
இதயத்தில் அவராற்றல் பண்ணாய் ஊறும்
தனக்கென்றே தனிகுணமே அவர்பால்
உண்டே-நம்
தமிழுக்கும் தமிழருக்கும் செய்வார் தொண்டே
தனக்கென்றும் சொந்தமென இல்லம் இல்லார்-நாளும்
தன்மானம் மிக்கவராய் வாழும் நல்லார்
குணக்குன்றே அவராகும் சொல்லப்
போனால்-கொண்ட
கொள்கையிலே அணுவளவும் மாறார்! ஆனால்
மணக்கின்ற மல்லிகையின் மென்மை
உள்ளம்-அவர்
மனமறிய ஒருநாளும் அறியார் கள்ளம்
வாழத்தான் அரசியலாம் என்றே
சொல்லி-இன்று
வாழ்வாரை கண்டவரும் அன்றே எள்ளி
ஈழத்தார் வாழ்கயென கொறடாப் பதவி-தூக்கி
எறிந்துவிட்டு பல்வகையில் செய்தார் உதவி
சூழத்தான் வேண்டுமா அவரின்
பணியே-மேலும்
சொல்வதென்ன மாசற்ற தங்க அணியே
எழுபத்து ஐந்தாண்டு பிறந்த தின்றே-அவர்
என்றென்றும் வாழ்கயென வாழ்த்த
நன்றே
புலவர் சா இராமாநுசம்
முனைவர் இரா சனார்தனம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteசிறப்பான வரிகளில் அவரின் சிறப்புகளை அறிய செய்தமைக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுனைவர் இரா சனார்தனம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வரிகளும் அற்புதம்
நன்று.நாவால் வாழ்த்தாமல் பாவால் வாழ்த்திவிட்டீர்கள்!
ReplyDeleteமுனைவர் இரா.சனார்த்தனம் அவர்களைப்பற்றி அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தும் உங்கள் வாழ்த்து மடல் அருமை. உங்களோடு சேர்ந்து நானும் அவரை வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்களோடு எனது வாழ்த்துக்களும் சேர்த்து கொள்ளுங்கள் அய்யா
ReplyDeleteஉங்களுடன் நானும் அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.
ReplyDeleteகவிதை அருமையாக உள்ளது புலவர் ஐயா.
வணக்கம் ஐயா! உங்களோடு இணைந்து நானும் முனைவர் இரா சனார்தனம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!!!
ReplyDeleteஎன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள்
ReplyDeleteரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிஞ்ச என்கபக்கமும் வந்து போங்க
ReplyDelete