மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்
பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
புலவர் சா இராமாநுசம்
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
ReplyDeleteசெப்பிட வாழ்பவர் பெருந்தகையே
உண்மை ஐயா
உண்மை
அருமை
அருமையாகச் சொன்னீர்கள் ஐயா...
ReplyDelete#துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
ReplyDeleteதூய்மையை சற்றே குறைந்தாராய்#
சரியாக சொன்னீர்கள் அய்யா ,இன்று பல 'ஆனந்தா'க்கள் இப்படி இருக்கிறார்களே :)
சிறப்பாகச் சொன்னீர்கள் புலவர் ஐயா.
ReplyDelete"புனிதா புனிதா என்றுலகு-நாளும்
ReplyDeleteபோற்ற ஏதும் செய்தாயா?"
என்று கேட்கிறீர்கள். இதுவரை இல்லை ஐயா! இனிமேல் முயலுவேன். சரியா?
- இராய செல்லப்பா நியூஜெர்சி
வணக்கம்.
ReplyDeleteவாழ்வைப் பொருளுள்ளதாக்கும் அறவுரை! அறிவுரை.
நன்றி ஐயா.
"பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
ReplyDeleteபிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே!" என
எண்ணுவோம் நாமே!