இனிய
உறவுகளே வணக்கம்!
தற்போது
வலையில் பதிவு போடுவதில் குறிப்பிட்ட
சிலரே
மாறி மாறி வருகிறோம் சில புதிய
பதிவர்கள்
வந்து
பதிவு போடுவதையும் பார்க்கிறோம் ஆனால் அவர்கள்
பதிவை
யாரும் படிப்பதாகத் தெரியவில்லை அவர்களை
ஊக்கப் படித்தி முன்னுக்குக் கொண்டு
வருவது நம்
கையில்தான்
இருக்கிறது !அது நமது கடமையும் ஆகும் நாம் அவ்வாறு செய்வது
வலையின் எதிரகால வளர்ச்சிக்கு உதவும்
என்று
கருதுகிறேன்
நீங்கள் என்ன கருதுகிறீர் என்பதை எழுதி
உதவுங்கள்!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஐயா அவர்களுக்கு,
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே....இன்றய அபரிவிதமான தொலைத்தொடர்பு வசதி வாய்ப்புகளினால் பலரும் இணையத்தில் உலவிவருவதைப்பார்க்கிறோம். வலைப்பதிவுகளை பலர் வாசிக்கிறார்கள் இருப்பினும் வாசிக்கும் அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. (ஒரு லைக் மட்டும் போட்டுவிட்டு பின்னூட்டமிட நேரமில்லை என்கிறார்கள்), ஆகவே விமர்சனங்கள் வந்தால் மட்டுமே பலர் வாசிக்கிறார்கள் என்பது தவறு. மேலும் ஒன்றை கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்... இந்தியாவின் புது தில்லி மற்றும் NCR-NEW DELHI என்னும் தேசிய தலைநகர் சுற்றுவட்டப்பகுதியான தில்லியின் எல்லையோர பகுதியில் இருக்கும் ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் (பிவாடி பகுதி) போன்ற மாநில பகுதியில் வசிக்கும் தமிழர்களும், கிட்டத்தட்ட 2000 தமிழ் குடும்ப உறுப்பினர்கள் வலைப்பதிவு எழுதுகிறார்கள் . (கடந்த 10 வருடங்களில் இது எனது தனிப்பட்ட விவர சேகரிப்பு). இதில் பெரும்பகுதி ஆங்கில வலைப்பதிவாகவே இருக்கிறது அதற்க்கு முக்கிய காரணம் இரண்டு மற்றும் மூன்றாம் தமிழ் குடும்ப தலைமுறையினரிடையே 60% சதவீதத்தினர்களுக்கு மட்டுமே தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் மற்ற அனைவரும் தமிழில் பேசமட்டுமே தெரிந்தவர்கள். சென்ற இரண்டு வருடங்களாக இங்கு வாழும் தமிழ் குடும்ப சிறுவர்கள் தமிழை எழுத படிக்க கற்றுக்கொண்டு தமிழக அரசின் அடிப்படை தமிழ் மொழித் தேர்வை எழுத உள்ளார்கள். தமிழகம் அல்லாத இந்தியாவின் பிரமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலை இது (ஒரு திட்டப்பணிக்காக 3 வருடம் சிங்கப்பூரில் நான் இருந்தபோதும் இதே நிலைதான், மொரிஷியஸ் நாட்டிலும் இதே நிலைதான்) தமிழகத்தில் வசிக்கும் தமிழர்கள் கூட ஆங்கில மொழியில் வலைப்பதிவை எழுதுகிறார்கள் பொதுவாக தமிழர்கள் தமிழில் வலைப்பதிவு எழுதுவதை தவிர்க்கிறார்கள். மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே போகிறது. எதிர்வரும் காலங்களில் நூலகங்களை பொருட்காட்சியகங்களில் மட்டுமே காணமுடியும் என்கிற நிலை வரலாம். "சேவல் கூவிட பொழுது புலர்ந்தது" என்பது வெறும் புத்தகங்களில் மட்டுமே காணக்கூடிய வாக்கியங்களாகிவிட்ட இன்றய சூழலில், அத்தை, மாமன், சித்தாப்பா போன்ற உறவுமுறைகள் எதிர்வரும் சந்ததியினர்களுக்கு தெரியாமல்கூட போகலாம்..... இப்படிக்கு கோகி-ரேடியோ மார்கோனி.
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை! வருங்காலம்
Deleteகவலை அளிப்பதாகவே உள்ளது!
புலவர் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. பதிவுலகின் வளர்ச்சி ஏன் குன்றியது என்று ஆராய்ந்தால் ஏதாவது பயன் விளையும் என்று எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஇன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்!
உண்மைதான் அய்யா ,புதிய பதிவர்களும் பதிவைப் போட்டால் போதும் என்று மட்டும் நினைக்காமல் ,மற்றவர்கள் பதிவுகளுக்கு கருத்திடுவது ,வாக்களிப்பதும் என்று இருந்தால்தான் தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆர்வம் வரும் :)
ReplyDeleteஇன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்
அருமையான கருத்து அய்யா
ReplyDeleteபதிவுகளில் எல்லாம் இப்போது ஒரு நண்பர் கூற் இருந்ததுபோல் மொய்க்கு மொய்தான் எல்லோர் பதிவையும் வாசிக்க முடிவதில்லை முதலாவது எல்லோரதுஎழுதுபொருளும் எல்லோரையும் ஈர்ப்பதில்லை சினிமா சமையல் அரசியல் ஆன்மீகம் பொன்ற பதிவுகளுக்குவரவேற்பு அதிகம் இன்னொரு முக்கிய செய்தி எல்லோருக்கும் நேரம்போதவில்லைமீறி சில பின்னூட்டமிட்டவர் வலைத்தளங்கள் மூடிப் பலமாதங்கள் ஏன்வருஷங்கள் கூட ஆயிருக்கின்றன. வாசகர்களைக் கவர அவர்கள்விரும்புமாறு பதிவுகள் எழுத வேண்டும் போல் இருக்கிறது நீங்கள் எடுத்துள்ள பிரதிக்ஞை தொடர வேண்டுகிறேன்
ReplyDeleteஉங்கள் கருத்து சரிதான்ப்பா. இப்பயும் பிளாக் எழுதுறவங்க இருக்காங்க. இணைக்குறது எப்படின்னுதான் புரில
ReplyDeleteஇன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்
நீங்கள் சொல்வது சரி
ReplyDeleteமுன்பு பின்னூட்டமிடுவதில்
எனக்கும் திண்டுக்கல் தனபாலன்
அவர்களுக்கும் போட்டி என்பது மாதிரியே
அதிகப் பின்னூட்டமிடுவோம்
இப்போது முடியாமல் போனது
வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது
தாயகம் திரும்பியதும் மீண்டும்
தொடர முடிவெடுத்து இருக்கிறேன்
பார்ப்போம்
இன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்
வணக்கம் ஐயா
ReplyDeleteநல்லதொரு துவக்கம் இதையே நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன்
இன்றும்கூட பழைய பதிவர்கள் சிலர் நாம் எழுதவில்லையே பிறகு எதற்கு மற்றவர்களுக்கு கருத்துரை இடவேண்டும் என்று எண்ணுகிறார்கள்
பதிவர்கள் மனதில் அரசியல்வாதிகள் போல எண்ணங்கள் உதிப்பது நல்லதல்ல.
நான் புதியவர்களை தங்களைப்போல் ஊக்கப்படுத்தி கருத்துரை எழுதி வருகிறேன்.
வாழ்க வலையுலகம்.
த.ம.பிறகு.
இன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்
ஐயா த.ம. சேர்ந்து விட்டதாக சொல்கிறது.
Deleteவணக்கம் ஐயா! தங்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன். பதிவர்களில் பலர் முகநூலுக்கு மாறிவிட்டதால் 2011,12 களில் இருந்த எழுச்சி பதிவுலகத்தில் இல்லை என்பது உண்மை. மேலும் பதிவர் சந்திப்பு நடக்காததாலும் தொடர்பு குறைந்து விட்டது.
ReplyDeleteஇன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்
நல்ல கருத்து ஐயா! முடிந்தவரை நாங்கள் புதியவர்களின் பதிவுகளையும் வாசிக்கிறோம். எங்களுக்கு வருபவர்களுக்குத்தான் நாங்கள் செல்வோம் என்ற கணக்கு எதுவும் இல்லை. யாருடைய பதிவு பிடித்திருந்தாலும் கருத்து இடுவதுண்டு.
ReplyDeleteநாங்களும் தங்கள் கருத்தை ஆதரித்து பின்பற்ற முயற்சி செய்கிறோம் ஐயா...
இன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்
த ம 7
ReplyDeleteநல்லதொரு கருத்து.
ReplyDeleteஎட்டாம் வாக்கு.
இன்று முதல் இன்னர் இனியர் என்று எண்ணால் அனைத்து
Deleteபதிவுகளையும் படித்து மறுமொழி போடுகிறேன்
மூத்த வலைப்பதிவர்கள் அனைவருக்கும் உண்டான ஆதங்கம் அய்யா.
ReplyDeleteஉண்மைதான் ஐயா
ReplyDeleteவலை தளத்தினைப் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், கருத்து என்று எதையுமே தெரிவிப்பதில்லை, இரண்டு அல்லது மூன்று சதவீதத்தினரே கருத்தினைத் தெரிவிக்கிறார்கள்.
புதிய பதிவர்களை ஊக்குவிப்பதும் உற்சாகப்படுத்துவதும் நம் அனைவரின் கடமையாகும்.
தம+1
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி.. பருந்தாக முடியாது என்பது போல...என்னால் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு மறு மொழி,கருத்துரை வழங்க முடியவில்லை..காரணம் பல. இருந்தாலும் என்பதிவுக்கு வந்து கருத்துரை வழங்கியவர்களுக்கு கண்டிப்பாக பதில் கருத்துரை, மறுமொழி பதிவு செய்து விடுகிறேன் அய்யா
ReplyDeleteஅருமையான கருத்தினைக் கூறியுள்ளீர்கள். இதனைக் கடைபிடிப்பேன் ஐயா.
ReplyDeleteஉண்மைதான் ஐயா...
ReplyDeleteமுடிந்தவரை புதியவர்களை ஊக்குவிப்போம்...
நம்மில் மற்றோருக்கு அறிமுகம் செய்வோம்...
வரவேற்போம்.
ReplyDelete