கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!
ஆயிர மாயிரம் பாடலைப் பாடி
அரியநல் உவமைகள் ஆய்வுற நாடி
பாயிரம் தம்மொடு அமைந்த காவியம்!
பண்பினை விளக்கும் பைந்தமிழ் ஓவியம்!
தாயென போற்றும் தமிழ்மொழி தன்னில்
தன்னிக ரற்றுத் தழைப்பதை எண்ணில்
வாயினில் விளக்கிட வார்த்தைகள் இன்றே!
வாழும் இலக்கியம் தனிலிதும் ஒன்றே
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
கவிதை வரையும் வல்லமை புரியும்!
உம்பரும் போற்றும் உன்னதக் கதையே
ஒருவனுக் கொருத்தியாம் சாற்றும், இதையே
அன்பர்கள் ஆய்ந்து குறைநிறை காண்பதும்
அடிக்கடிப் பட்டி மன்றங்கள் பூண்பதும்
இன்புற நடைபெறும் ஏற்புடை நிகழ்ச்சியே!
எல்லையில் கம்பனின் கற்பனை புகழ்ச்சியே
தலைமுறை பலவும் தாண்டிய போதும்
தன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்
நிகரில் இலக்கிய மணத்தொடு சூழும்
கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
கற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்
புலவர் சா இராமாநுசம்
கம்பர் பற்றி அழகான கவிதை பாஸ் அருமை
ReplyDeleteகம்பனும் பாரதியும் என் இரு கண்கள்....அழகான இக்கவிதை மனசை அள்ளுகிறது.
ReplyDeleteஅவர்தான் காலத்தால் அழியாத கவிஞர் ஆயிற்றே
ReplyDeleteத.ம 2
தலைமுறை பலவும் தாண்டிய போதும்
ReplyDeleteதன்னிலை தன்னில் அழிவிலா தேதும்
நிலைபெற நின்றே இன்றும் வாழும்//
காலாத்தால் அழியாத காவியத்தைக் கொடுத்தவர்..
வரிகள் அருமை..
//கலைமிக கற்பனைக் களஞ்சியம் என்றே
ReplyDeleteகற்பவர் கற்றவர் போற்றிட நன்றே
மலையென மக்கள் மனதில் தங்கிட
மறையாது என்றும் மகிழ்ச்சி பொங்கிடும்//
நல்ல வரிகள்....
அசத்தல்.
ReplyDeleteஉண்மைதான் ஐயா கம்பனின் கவிதைக்கு என்றுமே
ReplyDeleteதனிச்சிறப்பு உள்ளது .அருமை!..உங்கள் கவிதையும் .
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ....
கம்பர் கம்பர் தான்..அது போல்..நீங்கள் நீங்கள் தான்...மற்றுமொரு தரமான படைப்பு..புலவரே...
ReplyDeleteK.s.s.Rajh said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஷைலஜா said.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
M.R said.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கம்பனுக்கு என்றும் அழிவில்லை என்பதே உண்மை.திகட்டாத விருந்து.
ReplyDeleteகவி பாடிய கம்பனுக்கு
ReplyDeleteகவி 'பா' !
திகட்டாமல் தந்தது
உங்கள் சொற்'பா'!
சொன்னது இந்த
தோழன் ம'பா'.
கவிச் சக்ரவர்த்தி கம்பன் பற்றிய அருமையான கவிதை ஐயா!
ReplyDeleteஅக்காலக் கம்பனை பற்றி
ReplyDeleteஇக்காலக் கம்பன்
எழுதிய
எழிலான கவிதை
எத்திசையும்
புகழ் பரப்பும்
அருமை அய்யா
Unmai ayya. Kambarayam padithathanaalthan oru Kannadhasan uruvanaan. Ithu avere sonnathu. Marabu kavithai vaazha ungalai ponravargalin sevai avasiyam.
ReplyDeleteTM 12.
Kambaramayanam enakku romba pidikkum.
ReplyDeleteஏழாம் அறிவு படத்தில் வருகிறதுபோல நீங்களும் ஒருவேளை கம்பனின் வழிவந்தவராகக்கூட இருக்கலாம் ஐயா.எப்பவும்போல பாராட்டுக்கள் !
ReplyDeleteசும்மாவா சொன்னார்கள் கவிச் சக்கரவர்த்தி என்று....
ReplyDeleteஅச் சக்கரவர்த்திக்கே அழகிய பாமாலை அணிவித்துவிட்டீர்கள் புலவரே..
அழகு அழகு...
கம்பன் ஒரு மகாஞானி என்பேன் பலதையும் தன் கவிதையில் தந்த காலத்தூதுவன் அவனின் பெருமையைப் பாடி நிற்கும் கவிதை அழகு புலவரே!
ReplyDeleteகவிச்சக்கரவர்த்திக்கு ஒரு அழகிய கவிமகுடம். கவியும் கருத்தும் வெகுநன்று. பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteநான் வியந்த இலக்கியப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் கம்பர்..
ReplyDeleteவெய்யோன்ஒளி தன்மேனியின்
விரிசோதியின் மறையப்
பொய்யோஎனும் இடையாளொடும்
இளையானொடும் போனான்
மையோமர கதமோமறி
கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவுஎன்பதோர்
அழியாஅழகு உடையான்.
என் மனதில் என்றும் நீங்காத..
நயமிக்க கற்பனையாகும்..
எதிர்காலத் தலைமுறையினருக்கு இதுபோன்ற அறிமுகங்கள் அடிப்படைத்தேவை புலவரே..
அருமை
அருமை!
புவிதனில் பலரும் படித்திட அவரே
ReplyDeleteபுலமைக்கும் நிகரென உண்டா?
நல்லதொரு கேள்வி..
shanmugavel said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தோழன் மபா, தமிழன் வீதி sa
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
A.R.ராஜகோபாலன் sai
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
துரைடேனியல் said.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் sai
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தனிமரம் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மதுமதி said.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழை ஆழமாக ரசிக்கிறேன் ஐயா தங்கள் பண்ணியத்தில்...
ReplyDeleteஅருமையான வரிகள். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான நல்ல பதிவு. வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteநம்ம தளத்தில் (பணம்-பாடல்கள் பற்றி):
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
தமிழுக்கு மகுடன் சூட்டியவருக்கு தங்கள் தமிழ் மூலம் நீங்கள் சூட்டிய மகுடம் அருமை ஐயா!
ReplyDeleteஅருமையான வரிகள் ஐயா... கவிக்கு கவி ஆற்றிய தங்கள் பணி சிறக்கட்டும்.
ReplyDeleteஎனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு
கம்பனை பற்றி ஒரு
ReplyDeleteஅழகான சிறு காவியம் ஐயா இது ..
அருமை ..
நிச்சயம் கம்ப ராமாயணம் படிக்க
முயற்சி செய்வோம்
வணக்கம் ஐயா...
ReplyDeleteவலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள் ஐயா..
http://blogintamil.blogspot.in/2013/02/2.html