ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது
உடைந்தால் வருவது வீழ்வாகும்!
உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்
உறவே கொண்டால் உம்மோடும்!
மற்றவர் தருவது அன்பாகும்-இதை
மறப்பின் வருவது துன்பாகும்
!கற்றவர் கல்லார் பேதமிலை-நாளும்
கருதி நடப்பின் சேதமிலை
சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
சமயப் பூசல் வேண்டாமே
பீதியைக் கிளப்பி நாடெங்கும்-நம்
பிள்ளைகள் பெண்கள் வீடெங்கும்
வீதியில் நடக்கவே அஞ்சிடவே-வரும்
வேதனை ஒன்றே மிஞ்சிடவே
ஆதியில் உண்டா சாதியென-நீர்
ஆய்ந்தால் அறிவீர் பாதிலென
மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
அதன்வழி அழியும் கேடுகளே-செய்தி
அறியத் தருநல் ஏடுகளே
பதமுற எதையும் போடுங்கள்-கலவரம்
பரவா வழிதனை நாடுங்கள்!
உலக மெங்கும் போராட்டம்-பெரும்
ஊழல் வாதிகள் வெறியாட்டம்!
கலகம் இல்லா நாடில்லை-தினம்
காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த!
தேசமும் மதவெறி பித்தரென!
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
அஞ்சிட காலம் கடக்கிறதே
புலவர் சா இராமாநுசம்
தத்துவ கவிஞர், எனறோ, பொதுவுடைமைப் புலவர் என்று நான் கொடுக்கும் பட்டத்தினை ஏற்றுக்கொள்வீர்களா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் ஜயா எப்படி சுகம்?
ReplyDeleteஅருமையான கவிதை நீண்டநாட்களுக்கு பின் உங்கள் கவிதைகளை மீண்டும் படிக்கின்றேன்
ஒன்று பட்டு தரணியை வெல்வோம் ..!
ReplyDeleteமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
ReplyDeleteமதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
எதுவும் சம்மதம் சாற்றுங்கள்
உணர்வார்களோ உணர்த்தல் உன்னத வாழ்வாகும் . சிந்தனை சிறப்பு ஐயா .
புரியாதவர்களுக்கு சொல்லலாம். புரிந்தும் புரியாததுபோல் நடிப்பவர்க்கு சொல்லியும் பயன் இல்லை அண்ணா.
ReplyDeleteஅருமையான சிந்தனையைத் தூண்டி விடும் கவிதை ஐயா!
ReplyDeleteமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி
மதமிகு வேழமாய்த் திரியாதீர்
இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்
எதுவும் சம்மதம் சாற்றுங்கள் /////
அருமை......!
சொல்லுங்கள் ஐயா.ஒருசிலரின் காதுகளில் விழுந்தால்கூட சந்தோஷமே.எத்தனை அடுக்கடுக்கான நல்ல வார்த்தைகள்.மனதில் பதிப்போம் !
ReplyDeleteஇனம் மொழி சாதி வேறுபாடின்றி
ReplyDeleteஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வென
நெஞ்சில் பதியச் செய்யும் கவிதை ஐயா..
மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்....மனதில் ஆழமாக பதிவும் பாடலாகவும் இதனை உருவாக்கலாம்
ReplyDelete//உலக மெங்கும் போராட்டம்-பெரும்
ReplyDeleteஊழல் வாதிகள் வெறியாட்டம்!
கலகம் இல்லா நாடில்லை-தினம்
காணும் செய்திக்கோர் அளவில்லை
திலகம் காந்தி புத்தரென-வாழ்ந்த!
தேசமும் மதவெறி பித்தரென!
அளவில் நாளும் நடக்கிறதே-மக்கள்
அஞ்சிட காலம் கடக்கிறதே//
உண்மையை ,உலக நிகழ்வுகளை தமிழில் படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.
// சாதிப் பூசல் வேண்டாமே-வீண்
ReplyDeleteசமயப் பூசல் வேண்டாமே //.
உங்கள் உயர்ந்த எண்ணப்படியே அனைவரும் நடந்தால் எவ்வளவோ நன்மைகள் நடக்கும்.
காலத்துக்கு ஏற்ற அறிவுறுத்தல்.
ReplyDeleteநன்று புலவரே.
முஹம்மது யாஸிர் அரபாத் said...
ReplyDeleteஅன்பரே
ஏற்றுக் கொள்வதோடு நன்றியும் நவில்கிறேன் ஆனால், இதுவரை எனக்குப் பலரும் கொடுத்த விருதினை
ஏற்றுக் கொண்டதோடு என் வலையில் அதைத் போடுவதில்லை, என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிக்க!
வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
K.s.s.Rajhsaid...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
சசிகலா said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
GowRami Ramanujam Solaimalaisaid...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
மாத்தியோசி - மணி said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
ஹேமாsaid...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
சிட்டுக்குருவிsaid
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோsaid...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
சா இராமாநுசம்
hello sir/madam
ReplyDeletei read your post interesting and informative. i am doing research on bloggers who use effectively blog for disseminate information.i glad if u wish to participate in my research. if you are interested please contact me through mail. thank u