நல்லோரே நல்லோரே வாருமிங்கே-தேர்தல்
நாடக ஒத்திகை பாருமிங்கே
வல்லோரே வைப்பதே சட்டமென-ஆள
வந்தவர் போடுவார் கொட்டமென
பல்லோரே சேருவார் கூட்டணியே- கொள்கை
பறந்திட தேடுவார் ஓட்டினியே
சொல்வாரே கூசாமல் நாக்குமின்றே-பணி
செய்திட நிற்பதாம் நோக்கமென்றே
தன்னலம் இல்லாதார் ஒன்றுகூடி-பெற்று
தந்தாராம் சுதந்திரம் போருமாடி
என்நலம் காப்பதாம் என்றேமனம்-நாளும்
எண்ணுவர் கைகளில் சென்றேதினம்
உன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்
உணராது இருப்பதும் தவறேயென
பொன்மனப் பெரியோரே உணர்ந்திடுவீர்-இந்த
போக்கினை நீக்கிட என்னவழி
நாளை பார்ப்போம்.......!
உருவாகா நிலைகாணும் சூழல்மட்டும்
வாராது ஒருநாளும் உண்மையிது-கடந்த
வாராது ஒருநாளும் உண்மையிது-கடந்த
வராலாறு காட்டிடும்தன்மையிது
சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
செய்வதே உண்மையில் நமதுகடன்
போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்
கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
போட்டிட கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
போடவும் தருகின்றார் நோட்டேபல
கேட்டிட யாரிங்கே நாதியில்லை-தட்டி,
கேட்டவர் பெறுவதோபீதியெல்லை
ஓட்டிட போகவே அஞ்சுகின்ற-நிலை
உள்ளதை எண்ணுவீர் கொஞ்சமின்றே
வந்ததேலாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்ததேலாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்
சொந்தமாய் பிடியின்றி போவாரந்தோ-நல்
சுடுகாடும் இல்லாமல் ஆவாரந்தோ
சிந்தனை செய்திட வேண்டுமுடன்-என
செப்பியே மக்களை தூண்டுமுடன்
வந்தனை கூறியே முடித்துமிதை-நெஞ்சில்
வடிந்ததை கவிதையாய் தொடுத்துமிதை
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம்
உண்மை. ஊழல் இல்லாத ஆட்சியைத் தருபவர்தான் யார் இருக்கிறார்கள்? ம்ஹூம்...
ReplyDeleteஊழல் இல்லாத ஆட்சி மலரட்டும்
ReplyDeleteநம்பிக்கையே நிலையானதா?
ReplyDeleteவிடியல் வரும் என்று நம்புவோம் ஐயா
ReplyDeleteதமிழ் மணம் 1
நிச்சயம் ஓர் நாள் விடியும் அது நம்மால் மட்டுமே முடியும்...
ReplyDeleteநிச்சயம் ஓர் நாள் விடியும் அது நம்மால் மட்டுமே முடியும்...
ReplyDeleteநிச்சயம் ஒரு நாள்நல்லது நடக்கும் ஐயா
ReplyDeleteஉண்மை நிலை;மாற்றம் வருமா?
ReplyDeleteநலந்தானே ஐயா
அருமை ஐயா!!
ReplyDeleteஇதுபோன்ற நாடக ஒத்திகை மறையும் நாளும் வருமோயிங்கு?