Tuesday, August 20, 2013
Thursday, August 1, 2013
முக்கிய அறிவிப்பு - சென்னை பதிவர் சந்திப்பு 2013
பதிவுலகத்
தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள்
சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும்
மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக
அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள்
மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள்
ஆரம்பித்துவிட்டன.
சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை இங்கே காணலாம்.
சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த வருடம் பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பதிவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சி
ஒரு வலைப்பதிவராக மட்டும் நாம் அறியும் பதிவரின் இதர திறமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில பதிவர்கள் தங்களின் திறமையை நிறைய மேடைகளில் வெளிப்படுத்தி வரலாம்.சில பதிவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்த மேடைகள் இல்லாமல் இருக்கலாம்.எனவே பதிவர்களின் மற்ற திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கோடு இந்நிகழ்ச்சி ஏற்பாடு ஆகி வருகிறது.அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.
இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நூல் வெளியீடு:
கடந்த ஆண்டு நடந்த பதிவர் சந்திப்பில் பதிவர் சசிகலா அவர்களின் 'தென்றலின் கனவு' கவிதை நூல் வெளியிடப்பட்டது.அதே போல் இந்த வருடமும் பதிவர்கள் தங்களின் நூலை இந்த நிகழ்வில் வெளியிடலாம். அவ்வாறு நூல்வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 05.08.2013 க்குள் 9894124021 இந்த எண்ணிலோ அல்லது kavimadhumathi@gmail.com இந்த மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.குறிப்பிட்ட தேதிக்குள் சொன்னால் மட்டுமே நிரலில் அது சேர்க்கப்படும் என்பதை சொல்லிக்கொள்கிறோம்.
(கோவை பதிவர் அன்பு நண்பர் சங்கவி அவர்களின் கவிதை நூல் வெளியிடுவது மட்டும் உறுதியாகியிருக்கிறது)
வருகைப் பதிவு:
கடந்த முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள், முறையாக தங்களின் வருகையை மின்னஞ்சல் வாயிலாக உறுதி படுத்திய பின்னரே வருகை தருவோரின் பட்டியலில் அவர்களின் பெயரை இணைத்துக்கொண்டோம். அதைப் போலவே இந்த முறையும் பதிவர்கள் தங்களின் வருகையை தயவு கூர்ந்து மின்னஞ்சலில் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.கடந்த முறை பதிவு செய்தவர்கள் தவிர நிறைய பதிவர்கள் சந்திப்பிற்கு வந்ததால் அவர்களை சரியான முறையில் உபசரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். உணவு மற்றும் உபசரிப்பு போன்றவை வருகைப் பதிவு செய்த பதிவர்களை வைத்தே தீர்மானிக்கப் படுவதால் தங்களின் வருகையை அவசியம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிபடுத்தவும்.கீழ்க்காணும் பதிவர்களை தொடர்பு கொண்டு வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆரூர் மூனா செந்தில்
நன்கொடை:
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

·
அஞ்சாசிங்கம் செல்வின்
·
சிவக்குமார் – மெட்ராஸ்பவன்
·
பிரபாகரன் பிலாஸபி(சென்னை)
·
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
·
சதீஷ் சங்கவி – கோவை
·
வீடு சுரேஷ்குமார் – திருப்பூர்
·
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
·
தனபாலன் - திண்டுக்கல்
நன்கொடை:
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது.சென்றமுறை மக்கள் சந்தை கொஞ்சம் உதவியது.இந்த முறை அப்படியேதும் வாய்ப்பு இல்லை என்றேத் தெரிகிறது.. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பதிவர்கள் மதுமதி மற்றும் பட்டிக்காட்டான் ஜெய் அலைபேசி எண்ணிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்..பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்து தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
இதுவரை சென்னை பதிவர் சந்திப்பிற்கு வர சம்மதம் தெரிவித்துள்ள பதிவர்கள்
பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. எண்ணிக்கை கூடும்போது இப்பட்டியல் புதிதாக
பகிரப்படும்:
ஜோதிஜி திருப்பூர்
கவிதைவீதி செளந்தர்
சரவணன்(ஸ்கூல் பையன்)
ரூபக்ராம்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
ரஹீம் கஸாலி
சிராஜுதீன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கேபிள் சங்கர்
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
தனபாலன் - திண்டுக்கல்
வீடு சுரேஷ்
சசிமோகன்
இரவுவானம் சுரேஷ்
நாய் நக்ஸ் நக்கீரன்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
நிகழ்காலம் எழில்
கலாகுமரன்
கோவை ஆவி
உலகசினிமா பாஸ்கரன்
சுட்டிமலர்
கோவை கமல்
கோவை சதிஸ்
வெண்பா சுஜாதா
கோவை நேரம் ஜீவா
கோவை சக்தி
இப்படிக்கு இளங்கோ
ஒட்டக்கூத்தன்
வா.மு.முரளி
ஒட்டக்கூத்தன்
கோவை கோவி
சாமக்கோடங்கி பிரகாஷ்
கோவை ராமநாதன்
சதீஸ் சங்கவி
சிபி செந்தில்குமார்
வீரகுமார்
குருவை மாதேஸ்
குணா
சேலம் தேவா
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கிராமத்துக் காக்கை
விஜயன் துரைராஜ் கடற்கரை
கருத்து கந்தசாமி
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
முகமது சபி சக்கரக்கட்டி
அ.சிவசங்கர்
தங்கம் பழனி
முனைவர் இரா.குணசீலன்
சைதை அஜீஸ்
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
முரளிக்கண்ணன் மதுரை
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
சசிகலா திருவண்ணாமலை
ஜீவன் சுப்பு,
சிவகாசிகாரன் ராம் குமார்,
சதீஸ் செல்லதுரை
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
சுப்புரத்தினம்
ராகவாச்சாரி
ரேகா ராகவன்
ஆதிமனிதன்
சமீரா
நம்பி
வழிப்போக்கன் ராஜேஷ்
பழனி கந்தசாமி(மன அலைகள்)
புலவர் இராமானுஜம்
சென்னை பித்தன்
கவிஞர் மதுமதி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
மோகன்குமார்(வீடு திரும்பல்)
கவியாழி கண்ணதாசன்
பட்டிகாட்டான் ஜெய்
டி.என்.முரளிதரன்
கே.ஆர்.பி.செந்தில்
ஆரூர் மூனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
அரசன் ( கரைசேரா அலை)
சீனு (திடங்கொண்டுபோராடு)
பிலாசபி பிரபாகரன்
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
மேலதிக தகவல்கள் அடுத்த பதிவில்
வெளியாகும்..பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில்
எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.(இதே பதிவை அப்படியே நகலெடுத்து பதியவும் செய்யலாம்)
Wednesday, July 31, 2013
என் முகநூல் பதிவுகள் -4
கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முடியாது.
மாணிக்கம் முதலான உயர் மணிகளின் நல்லியல்பை அதைக் கழுவிய பின் அறிவார்கள். குதிரையின் நல்லியல்பை அதன் மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள். பொன்னின் தரத்தை அதனை உருக்கிப் பார்த்து அறிவார்கள். உறவினர்களின் இயல்பைத் தன் செல்வத்தை எல்லாம் இழந்து வறுமையுற்ற போது அறிவார்கள்.
நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.
அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.
ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.
புலவர் சா இராமாநுசம்
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு பாடலை முடித்தேன் படித்திட நன்றி
எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் எதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே
செப்பிட இதுதான என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி
புலவர் சா இராமாநுசம்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் எதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில தோன்றடும சிறப்பே
செப்பிட இதுதான என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி
புலவர் சா இராமாநுசம்
Monday, July 29, 2013
இருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரையில்
பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும்
இறப்பு வழவில் ஒருமுறைதான்
இருப்பது நாமே எதுவரையில்-இதை
எவரும் அறியார் இதுவரையில்
சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என
சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா
வெறுப்பா மற்றவர நமைநோக்க-பெரும்
வேதனை வந்து நமைதாக்க
எண்ணிப் பாரீர் மனிதர்களாய்-பல்
இதயம் வாழ்த்த புனிதர்களாய்
மண்ணில் வாழ்ந்த காலத்தே-பிறர்
மனதில் திகழ ஞாலத்தே
கண்ணிய முடனே வாழ்ந்தோமா-நம்
கடமை அதுவென ஆய்ந்தோமா
பண்ணிய பாபம் ஏதுமிலை-எனில்
பயப்பட வாழ்வில் எதுவுமிலை
மரணம் நம்மைத் தேடிவர-கேட்ட
மக்கள் அனைவரும ஓடிவர
வரமே பெற்றோம் நாமென்றே-அங்கு
வந்தோர் வாழ்த்த மிகநன்றே
கரமே குவித்துக் கண்ணீரை-அவர்
காணிக்கை யாக்க பண்ணிரேல்
தரமாம் உமது வாழ்வாகும்-பெயர்
தரணியில் என்றும் நிலையாகும்
புலவர் சா இராமாநுசம்
Friday, July 26, 2013
நான் செல்லும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப் பயணதிட்டத்தின் விரிவான விளக்கம்
My Mobile No: 44 7452 326636 ( வெளிநாட்டு எண்)
அன்புடையீ்ர் ! வணக்கம்!
நான் , ஏற்கனவே அறிவித்தபடி என்னுடைய ஐரோப்பிய நாடுகளின்
சுற்றுப் பயணதிட்டத்தை விரிவாக கீழே தந்துள்ளேன்
தேதிவாரியாக தங்கும் விடுதியும் வரும் நாடுகள் பற்றியும் விடுதியி்ன் தெலை பேசி எண்ணும் தந்துள்ளேன் மேலும், என்னுடைய
கைபேசி எண்ணும் தந்துள்ளேன்( வெளிநாட்டு எண்)
எனவே, ஆங்காங்கு உள்ள உறவுகளை சந்திக்கவும் பேசவும்
விரும்புகிறேன் மேலும்,அங்கு, தற்போது உள்ள காலநிலை(குளிர்) எப்படி
உள்ளது என்பது பற்றியும் அதைத் தாங்கிக் கொள்ள , நான் என்னென்ன
கொண்டு வர வேண்டும் என்பது பற்றியும் அந்தந்த பகுதி வாழ் உறவுகள்
இப் பதிவைப் படித்தபின், இப்பதிவின் கீழ் வரும் மறுமொழிப் பெட்டியிலேயே, உடன் தேரிவித்தால் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். வயதானவன் என்பதை நீங்கள் அறிவீர்கள் உங்கள் மறுமொழி
அவசியத் தேவை!
அன்புள்ள
புலவர் சா இராமாநுசம்
Hotel Name and Address
02nd August 2013 x 2 nights
Novotel London Heathrow Airport Hotel
Cherry
Ln, Heathrow UB7 9HB, United Kingdom
Tel: +44
1895 431431
|
04th August 2013 x 2 nights
Mercure Paris Orly
Airport Hotel
Rue du Commandant Mouchette
91550 Orly Ouest
France
Tel +33 8 2580 6969
|
06th August 2013 x 02 nights
NH Den-Haag
Prinses
Margrietplantsoen 100,
2595
BR The Hague,
Netherlands
Tel: +31
20 795 6088
|
08th August 2013 x 01 night
Holiday Inn Express Cologne - Troisdorf
Echternacher
Straße 4,
53842
Troisdorf, Germany
Tel: +49
2241 39730
|
09th
August 2013 x 01 night
Mercure Stuttgart Hotel
|
10th
August 2013 x 03 nights
Terrace Hotel
Terracestrasse
33, 6390 Engelberg,
Switzerland
Tel: +41
41 639 66 66
|
13th
August 2013 X 01 night
Axams Olympia Hotel
Axamer
Lizum 2, 6094, Austria
Tel: +43
5234 65285
|
14th
August 2013 X 01 Night
Point Conselve Hotel
Via
Dell'Industria / B, 2,
35026
Conselve, Italy
Tel: +39
049 950 1588
|
15th
August 2013 X 01 Night
Florence Nord Hotel
Via
Francesco Baracca, 199/A,
50127
Florence, Italy
Tel: +39 055
431151
|
16th
August 2013 X 01 Night
Mercure Roma West Hotel
Viale
Eroi di Cefalonia, 301,
00128
Rome, Italy
Tel: +39
06 5083 4111
|
Tuesday, July 23, 2013
மறவழி வாழ்ந்தார் முன்னோரே –அதை மறந்து தாழ்ந்தார் பின்னோரே !
இல்லற வாழ்கை இன்றாமே!-வெறும்
இய.ந்திரம் என்றால் நன்றாமே
அல்லல் நாளும் படுகின்றோம் -மேலும்
ஆசைகள் வளர்ந்திட கெடுகின்றோம்
நல்லவர் எங்கே ? காணவில்லை -மனதில்
நாணமோ ! அச்சமோ! பூணவில்லை
வல்லவர் என்பவர் பொய்சூதே – நாக்கில்
வாய்த்தவர் ஆனதும் மிகதீதே
அறவழி நடப்பவர் குறைந்துவிட –வீண்
அகந்தை குணமே நிறைந்துவிட
துறவரப் போலிகள் நாடெங்கும் –கொள்ளை
தொடர்கதை ஆகிட தெருவெங்கும்
புறவழிச் சென்றே பொருள்தேடும் –மனப்
போக்கால் வாழ்வே இருள்மூடும்
மறவழி வாழ்ந்தார் முன்னோரே –அதை
மறந்து தாழ்ந்தார் பின்னோரே
சுயநலம் ஒன்றே குறியாக – பொருள்
சேர்ப்பதே! இன்றும் நெறியாக
நயனில வழிமுறை நாடுகின்றார் -ஆனால்
நல்லவர் வேடம் போடுகின்றார்
அயலகம் தன்னில் பொருள்தேட – பெரும்
அலைகடல் தாண்டிப் பலரோட
பயனில ஆனதே நம்நாடே –எண்ணிப்
பாரா அரசெனில் வரும்கேடே!
புலவர் சா இராமாநுசம்
Subscribe to:
Posts
(
Atom
)