Monday, February 12, 2018

தமிழ்மணத்திற்குத் தாழ்மையான வேண்டுகோள்!





தமிழ்மணத்திற்குத் தாழ்மையான  வேண்டுகோள்
        தகவல்  இல்லை என்று  நாள்தோறும்  தகவல்
தர  காரணம்  என்ன? ஏதேனும்….?
        பொருளாதார சிக்கலா! தொழில் நூட்பக் கோளாறா இவ்வாறு
தடைப்பட்டு இருப்பதற்கு என்று!? புரியவில்லை! உரியவிளக்க மளித்தால்
அதற்கேற்ப நாங்கள்  செயல் படுவோம்
        உன் வரவு இல்லாமல்  வலைப்பதிவுலகமே இருண்டு
கிடக்கிறது ! யார் எழுதுகிறார்கள். என்ன எழுதுகிறார் என உன்  பட்டியலைப்
பார்த்து அறிந்து நாள்தோறும் பழகி விட்ட நாங்கள்  இன்று , கண்ணைக் கட்டி காட்டில் விட்டது  போலவும் திசை அறியாத  மாலுமி போலவும்
திகைத்து நிற்கிறோம்
        இந்நிலை நீடித்தால் வலைப்ப பதிவு உலகமே காணாமல்
போய்விடும்
         இதுவரை நீ ஆற்றிக் கொண்டிருக்கின்ற சேவைக்கு ஈடோ  இணையோ என்பது முற்றிலும்  உண்மை!
         அது தொடர இறைவனை  வேண்டுவதோடு .நீயும்
விரைந்து விளக்க மளிக்க  வேண்டுகிறோம்
 
புலவர்  சா  இராமாநுசம்

Thursday, February 8, 2018

நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில் நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!


நிழலிங்கே நிஜமங்கே நிலமை ஆச்சே –நாட்டில்
நிகழ்கின்ற நடைமுறைகள் அனைத்தும் போச்சே!
விழலுக்கே நீர்பாய்ச்சி வீணாய்ப் போனோம் –புலம்பி
விம்முவதில் பயனில்லை! சிலையே ஆனோம்!
தழலுக்கு சுடுவதுதான் இயல்பு தாமே –தெரிந்தும்
தடம்மாறி வீழ்ந்ததுவும் அந்தோ நாமே!
சுழலுக்குள் சிக்கிவிட்ட கதைதான் இன்றே-கவிதை
சொல்லுவது புரிந்தாலே போதும் நன்றே!


புலவர்  சா இராமாநுசம்

Monday, February 5, 2018

உய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து உய்யும் வழிதனைக் காணுங்கள்





ஐயோப் பாவம் இடைப்பாடி-ஓ,பி.எஸ்
  ஐயா அவரும் உடன்பாடி-அந்தோ
பொய்யாத்  தோன்றும் கானலையே -நம்பி
   போவதும் ஆள்வதும் நிலையிலையே-மேலும்
செய்யாத் தவறுக்கு தண்டணைதான்-ஆதரவு
    செப்பியோர் மாற்றம் கொண்டதுதான-இனியும்
உய்யாவழியில் ஆளாதீர் ஆய்ந்து-விரைந்து
  உய்யும் வழிதனைக்  காணுங்கள்

புலவர்  சா  இராமாநுசம்

Saturday, February 3, 2018

மறவாது எழுதுவேன்! மரபில் கவிதை –என் மனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே!





மறவாது  எழுதுவேன்!  மரபில்  கவிதைஎன்
    மனமென்னும் தோட்டத்தில், போட்டீர்  விதையே!
இறவாது  வாழ்வது  அதுதான்  என்றேபலர்
 இயம்பிட, உள்ளத்தில்  ஏற்றேன்  இன்றே!
தரமாக  தந்திட  முயல்வேன்  நானேஅன்னை
     தமிழ்தானே  நமக்கெல்லாம்  திகட்டாத்  தேனே!
வரமாக வழங்கிடும்  மறுமொழி  தம்மைநீரும்
     வழங்கிட, வளர்ந்திட, வணங்குவேன்  உம்மை!

உள்ளத்தில்  எழுகின்ற  எண்ண தாமேதிரண்டு
     உருவாக, கருவாகி, கவிதை  ஆமே!
பள்ளத்தில் வீழ்ந்திட்ட  நீர்போல்  தேங்கிபின்னர்
     பாய்கின்ற நிலைபோல  நெஞ்சில்  தாங்கி,
கொள்ளத்தான்  எழுதிட முயல்வேன் !மேலும்அதில்
      குறைகண்டே  சொன்னாலும்  திருத்தி,  நாளும்!
எள்ளத்தான்  சொன்னாலும் வருந்த  மாட்டேன்மேலும்
      எவர்மனமும்  புண்பட  கவிதைத்  தீட்டேன்!

தனிமைமிகு  இருள்தன்னில்  தவிக்க லானேன்முதுமை
       தளர்வுதர  அதனாலே முடங்கிப்  போனேன்!
இனிமைமிகு  உறவுகளே  நீங்கள்  வந்தீர்நானும்
       இளமைபெற  மறுமொழிகள்  வாரித்  தந்தீர்!
பனிவிலக  வெம்மைதரும் கதிரோன்  போன்றேஎனைப்
       பற்றிநின்ற  துயர்படலம்  விலகித்  தோன்ற!
நனியெனவே  நலமிகவே  துணையாய்  நின்றீர்வாழ்
 நாள்முழுதும்  வணங்கிடவே  என்னை  வென்றீர்!

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...