வந்ததைய்யா வரவுசெலவு அறிக்கை ஒன்றே –ஏழை
வடித்திடவும் கண்ணீரை நாளும் நன்றே
தந்ததைய்யா ஐயகோ ! மத்திய ஆட்சி-நடுத்
தரமக்கள் அழுகையே இதற்குச் சாட்சி
ஏற்கனவே விலைவாசி விண்ணை முட்டும்!-மேலும்
ஏற்றமெனில் !அவர்விழியில் இரத்தம் சொட்டும்
தீர்க்கவழி பாருமய்யா! வாழ விடுவீர்-என்ன
தொடர்கதையா?வேண்டாமே ! பின்னர் படுவீர்!
தேவைவரி மறுக்கவில்லை! இதுதான் முறையா?-மக்கள்
தினந்தோறும் பயன்படுத்தும் பொருளும் குறையா
சேவைவரி உயர்த்தியதும் முற்றும் சரியா –உடன்
சிந்திப்பீர்! இல்லையெனில் விலையே குறையா
புலவர் சா இராமாநுசம்
ஏறுகின்ற எந்தப் பொருளின் விலைதான் இறங்கியிருக்கிறது? ஹூ .....ம்!
ReplyDeleteநன்றி!
Deleteஏறுகின்ற எந்தப் பொருளின் விலைதான் இறங்கியிருக்கிறது? ஹூ .....ம்!
ReplyDeleteநன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
வரவு செலவுத் திட்டம் எல்லாம் கண்துடைப்பு நாடகம்... அருமையாக கவியாக சொன்ன விதம் நன்று த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி!
Deleteஏறியது ஏறியதுதான் இறங்குவதற்க்கு வழி இல்லை
ReplyDeleteதமிழ் மணம் 2
நன்றி!
Deleteவாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது ஐயா...
ReplyDeleteநன்றி!
Deleteஏறியது ஏறியதுதான்
ReplyDeleteதம +1
நன்றி!
Deleteவிலை எல்லாம் ஏறுமுகம் இதான் இறங்கு முகம் இருப்பதாகத் தெரியவில்லையே ஐயா.....
ReplyDeleteநன்றி!
Deleteவரியில்லை என்று சொல்லிய மறு நிமிடம் பெட்ரோல் விலையை தாறுமாறாய் ஏற்றி விட்டார்கள் ,நல்லாவே ஏமாத்தறாங்க மக்களை :)
ReplyDeleteத ம 5
நன்றி!
Delete