சமன்செய்து சீர்தூக்கும் கோலை போன்றே -மன்றம்
சரியாக செயல்படின் விளைதலும் நன்றே -நாளும்
அமர்கின்ற உயர்நீதி மன்றங்கள் தாமே-எடுத்து
ஆராயின் ஊழலை ஒழித்திட போமே - அவரே
தமரென்ற போதும் தவறென்று கண்டால்-சற்றும்
தயங்காது தண்டணை தருவதாய் கொண்டால் -என்றும்
இமயோரும் வாழ்திட இறைவனாய் ஆவார்-அவரே
எல்லோரும் போற்றிட இதயத்தில் வாழ்வார்
புலவர் சா இராமாநுசம்