Showing posts with label அரசு செயலற்ற தன்மை அச்சம் கொடுமை கவிதை. Show all posts
Showing posts with label அரசு செயலற்ற தன்மை அச்சம் கொடுமை கவிதை. Show all posts

Wednesday, April 12, 2017

கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன் கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!



கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே
கொடிகட்டி பறந்திட ஊர்தோறும்
தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்
தொடர்ந்து தந்திட கேடுகளும்
இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம்
ஏற்பட மனதில் தினமின்றே!
நிலையே ஏற்படும் அறிவீரா? -உடன்
நிம்மதி ஏற்பட செய்வீரா?


பட்டப் பகலில் நடக்கிறதே-பெரும்
பணமே கொள்ளை! அடிக்கிறதே!
வெட்டி சாய்த்திட ஒருகும்பல்-கொலை
வெறியுடன் ஊரில் திரிகிறதே!
திட்டம் இட்டே செய்கின்றார்-மனம்
திடுக்கிட மக்கள் அழுகின்றார்!
கொட்டம் அடிப்பதை தடுப்பீரே-உடன்
கொடுமைக்கு முடிவு எடுப்பீரே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...