Showing posts with label அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம். Show all posts
Showing posts with label அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம். Show all posts

Friday, February 24, 2017

ஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்



வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து
வருமுன்னர் காத்திட ஆள்வோர் நெஞ்சம்
தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே
தடமறியா அரசேதான் நடத்தல் தொல்லை
கருவின்றி பிள்ளைபெற முயல்வோர் போன்றே-ஏதும்
கருதாது ஆட்சிதனை நடத்தல் சான்றே!
உருவின்றி நிழல்தேடும் காட்சி வீணே –மக்கள்
உணர்கின்ற நிலைவருமே விரைவில் காணே!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...