Showing posts with label இயற்கை அழிவு செயற்கை விளைவு பருவம் காலம் மாற்றம் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label இயற்கை அழிவு செயற்கை விளைவு பருவம் காலம் மாற்றம் கவிதை புனைவு. Show all posts

Wednesday, August 26, 2015

பாழாக இயற்கைதனைச் செய்தோம் வீணே-அதனால் பருவநிலை மாறியது நம்மால் தானே!


பாழாக இயற்கைதனைச் செய்தோம் வீணே-அதனால்
பருவநிலை மாறியது நம்மால் தானே!
வாழாது இவ்வுலகம் இப்படிப் போனால் –நமது
வருங்கா சந்ததிகள் நாசம் ஆனால்!
சூழாதோ பெரும்பழியும் நம்மை வந்தே-தீரா
சோதனைகள் பலவாறு துன்பம் தந்தே!
வீழாது காத்திட முயல வேண்டும்-இதுவே
வேள்வியென செய்வோமே நாளும் ஈண்டும்!


அன்னையவள் இயற்கைதனை வாழ வைப்போம்-மேலும்
அழிக்காமல் வளர்வதற்கு வழிகள் காண்போம்!
இன்னலெதும் இல்லாது இயற்கை யோடும்-என்றும்
இணைந்தேநாம் வாழ்ந்தாலே வாராக் கேடும்!
கன்னலென இனித்திடுமே மனித வாழ்வே-இதனைக்
கருதாமல் நடந்தாலே வருதல் வீழ்வே!
பொன்னதனைக் காப்பதுபோல் காக்க வேண்டும்-எழில்
பூத்திடவே காடுகளை ஆக்க மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...