Showing posts with label இறைவன் படைப்பு மாற்ற இயலாது கவிதை புனைவு. Show all posts
Showing posts with label இறைவன் படைப்பு மாற்ற இயலாது கவிதை புனைவு. Show all posts

Wednesday, February 27, 2013

இறைவன் படைப்பை வெல்ல ஆகாதே!




சிறுவன்

மயிலே மயிலே நீயேனோ - உன்
மனதை மயக்கும் உன்தோகை
ஒயிலாய் விரிய நடமாடி - பெரும்
உவகை கொண்டு ஆடுகிறாய்

மயில்

வெள்ளி வானில் கருமேகம் - பரவி
விரைய மயிலும் ஆடுமென
பள்ளிச் சிறுவா நீபாடம் - என்றும்
படித்த தில்லையா ஒரு நாளும்

சிறுவன்

அழகுமிக்கப் பொன் மயிலே - நடனம்
ஆடிக் காட்டும் நல்மயிலே
பழகிக் கொண்டால் உன்குரலும் - அந்த 
பாடும் குயிலாய் ஆகாதோ

மயில்

குயிலின் இனிமை என்குரலில் - நான்
கூட்டிக் காட்ட சிறுவாநீ
பயில வருமென எண்ணாதே - இறைவன்
படைப்பை வெல்ல ஆகாதே!

குறிப்பு- என் பேரனின் ஆசைக்கு ஏற்ப
                 எழுதிய கவிதை.
       

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...