Showing posts with label இலங்கை அதிபர் மாற்றம் வாழ்! வேண்டல் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label இலங்கை அதிபர் மாற்றம் வாழ்! வேண்டல் கவிதை புனைவு. Show all posts

Friday, January 9, 2015

திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!



அழிந்தது அரக்கர் ஆட்சி-இலங்கை
அரசியல் மாற்ற காட்சி!
வழிந்தநம் தமிழர் கண்ணீர் –பெருகி
வெள்ளமாய் அடிக்க எண்ணீர்!
ஒழிந்தது ஆணவக் ஆட்சி –இன்று
உலகமே போற்றும் மாட்சி!
கழிந்தநாள் மறப்ப தல்ல-அவை
கனவென நினைத்துத் தள்ள!


வருமாட்சி எப்படி என்றே –கேள்வி
வந்திட நெஞ்சில் ஒன்றே!
பெருமாட்சி செய்யத் தானே-சற்று
பெருமூச்சு எழவும் வீணே!
தருமாட்சி நன்றாய் காண –ஈழத்
தமிழரும் உரிமை பூண!
திருவாட்சி வருதல் வேண்டும்-வளமை
திரும்பிடச் செய்வீர்! மீண்டும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...