Showing posts with label இலங்கை புதிய அதிபர் மாற்றம் தமிழர் வாழ்வு உயர கவிதை. Show all posts
Showing posts with label இலங்கை புதிய அதிபர் மாற்றம் தமிழர் வாழ்வு உயர கவிதை. Show all posts

Monday, January 12, 2015

கட்டிய நாய்கூட எட்டிப் பாயும் கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்


ஈழத்துத் தமிழர்களின் ஓட்டைப் பெற்றீர்
இலங்கைக்கு அதிபரென பதவி உற்றீர்
வாழத்தான் அன்னவரும் வாக்குத் தந்தார்
வருகயென வரவேற்று திரண்டு வந்தார்
கூறத்தான் இயலுமா பட்டத் துயரம்
கொள்ளையென போயிற்றே எண்ணில் உயிரும்
மாறத்தான் செய்வீரே அதிபர் நீங்கள்
மன்றாடி கேட்கின்றோம் ஐயா நாங்கள்!


கட்டிய நாய்கூட எட்டிப் பாயும்
கால்பட்டால் எறும்புகூட கடித்தே மாயும்
வெட்டியநல் மரம்போல் வீழ்ந்தார் அந்தோ
வேதனையில் நாள்தோறும் துடித்தார் நொந்தே
பட்டியிலே மாடுகளை அடைத்தல் போல
பசியாலே துடித்தவர்கள் முடிவில் மாள
எட்டியென கசந்திட்ட வாழ்வு போதும்
இனியேனும் இனிக்கட்டும் விலக தீதும்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...