Showing posts with label ஈழநாசம் எவர் காரணம் நம்மவர் அமைதி கவிதை புனைவு. Show all posts
Showing posts with label ஈழநாசம் எவர் காரணம் நம்மவர் அமைதி கவிதை புனைவு. Show all posts

Saturday, March 9, 2013

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே ஏற்படவும் காரணமா சர்வதேசம்



குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை 
குருடாக செய்ததுவே நமதுதேசம் 
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள 
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம் 
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய 
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே 
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில் 
வரநீரும் காரணமே கையாமதனை 

எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே 
ஏற்படவும் காரணமா சர்வதேசம்
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகளமூட-தமிழன்
கல்நெஞ்சம கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும சர்வதேசம-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...