Showing posts with label உழவு தொழில் வளர பொருளுக்கு உழவனே விலை. Show all posts
Showing posts with label உழவு தொழில் வளர பொருளுக்கு உழவனே விலை. Show all posts

Tuesday, June 9, 2015

உழுது உழுது அலுத்தவனே உதிரிப் பூவாக ஆகிவிட்டான்!



உழுது உழுது அலுத்தவனே
உதிரிப் பூவாக ஆகிவிட்டான்!
அழுது அழுது வடித்த கண்ணீர்
ஆவி ஆனது வெம்மையிலே!
தொழுது வணங்க வேண்டியவன்
துவளவும் கைகள் முடங்கிவிடின்!
பழுது வந்திடிம் உலகத்திலே
பசியோடு பஞ்சமே கலகத்திலே!


அல்லும் பகலுமே பாடுபட்டோன்
அயராது சேர்த்திட்ட பொருளின்விலை!
சொல்லும் நிலையே அவனுகுண்டா?
சொல்லுங்கள் யாரேனும் கண்டதுண்டா!
கொல்லும் பசிப்பிணி மருத்துவனின்
குமுறும் உள்ளத்தை அறிந்திடுவீர்!
ஒல்லும் வழிதன்னை காண்பதுவே
உண்மையில் ஆள்வோரின் மாண்பதுவே!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...