Showing posts with label உழைப்போருக்கு சங்கம் தேவை கவிதை புனைவு. Show all posts
Showing posts with label உழைப்போருக்கு சங்கம் தேவை கவிதை புனைவு. Show all posts

Friday, November 24, 2017

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும் தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட



தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும்
தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட
சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவையே
சரியென்றே கொண்டதுடன் பின்னோர் போற்ற
அங்கங்கே தொழில்தோறும் சங்கம் தோன்ற-இன்றே
அடிப்படை உரிமைகள் மனதில் ஊன்ற
சிங்கத்தைப் போன்றின்று நடக்கக் காண்பூர்-உம்மின்
சிந்தையிலும் அதுபோன்றே உறுதி பூண்பீர்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...