ஈங்கிள்பர்க் (11-8-2013)
வழக்கம்போல் காலை உணவை முடித்துக் கொண்டு
புறப்பட்டோம் அன்று நாங்கள் கண்ட இடம் சுவிட்சர்லாந்தின் அழகிய மலையில் உயர்ந்த இடத்தில் உள்ள ஜங்க்ஃபிரோக் மற்றும்
இண்டர் லேகன்
ஆகியன!
இங்கே குறிப்பிடத் தக்கது ஜங்க்ஃபிரோக்கில் அமைந்துள்ள
இரயில் நிலையமானது
ஐரோப்பாவின் மிக உயர்ந்த, கடல் மட்டத்திலிருந்து 13333 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது
நாங்கள் முதலில் அங்கு செல்ல லாட்டர்பிரன்னன் என்னும் இடத்தை அடைந்து
மலை இரயில் மூலம் பயணமானோம் அதுவே இரண்டு வகையில் அமைத்திருக்கிறார்கள்
சற்று சரிவான இடத்திற் ஏற்ப ஒன்றும் சற்று செங்குத்தாக செல்ல மற்றொன்றும் என. ஆகவே இடையில் நாங்கள் இறங்கி வண்டி
மாறி ஏறி உச்சியில் உள்ள நிலையத்தை அடைந்தோம்
வழியில் நாங்கள் கண்ட காட்சிகளையும்
மலை உச்சியில் கண்ட காட்சிகளையும் நீங்களும்
கண்டு களிக்க இப்பதிவிலும்
அடுத்த பதிவிலும்
வெளியிடுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

