என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென
எண்ணத் திரையில் வந்தது ஓடலும்
ஒன்றோ இரண்டோ உரைத்திட வந்தேன்-உறவுகள்
உவந்து படித்ததை உரைப்பதே! செந்தேன்!
நன்றோ அறியேன்! நவில்வது நீரே!—மேலும்
நல்லது கெட்டது சொல்வது யாரே
இன்றோ நாளையே தொடங்கிட அதனை-கண்டே
எழுதுவீர்! வணக்கம் முடித்தேன்! இதனை!
புலவர் சா இராமாநுசம

