Showing posts with label ஓட்டுப் போடுதல் நம்கடமை கவிதை அனுபவம் புனைவு. Show all posts
Showing posts with label ஓட்டுப் போடுதல் நம்கடமை கவிதை அனுபவம் புனைவு. Show all posts

Tuesday, April 22, 2014

ஓட்டுப் போடுதல் நம்கடமை –அது ஒன்றே இன்று நமதுடமை!





இடையில், உள்ளது  ஒருநாளே -நமக்கு
   இருப்பது  தேர்தலில்!   வருநாளே!
படையுள் வீரன்  கைவாளே –என
   பயன்தர, ஓட்டு  அந்நாளே
தடையில் ! சென்றே  போடுங்கள்! –உணர்ந்து
    தக்கவர்  எவரென  தேடுங்கள்
கடையில்  விற்கும்  பொருளல்ல- எதிர்
   காலத்தின் விதியாம் அதைச்சோல்ல!

ஓட்டுப்  போடுதல்  நம்கடமை –அது
   ஒன்றே இன்று  நமதுடமை!
காட்டுத்  தர்பார்  ஒழியட்டும்!-இலஞ்ச
    கயமைக் குணமே  அழியட்டும்!
நாட்டு  நடப்பை  மாற்றிடவே –வெளி
   நாடுகள்  நம்மைப் போற்றிடவே !
கேட்டு மகிழச்  செய்வோமே –பெற்றக்
    கேடுகள்  நீங்க  உய்வோமே!

புலவர்  சா  இராமாநுசம்

  

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...