Showing posts with label கதிரவனே கதிரவனே கருணை காட்டு. Show all posts
Showing posts with label கதிரவனே கதிரவனே கருணை காட்டு. Show all posts

Sunday, May 7, 2017

கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு !



கதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும்
கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு
முதியவனாம் படுகின்றேன் அந்தோ தொல்லை-நாள்
முழுவதுமே வாட்டுவதால் தூங்கல் இல்லை
கதியிலவே கரம்குவித்து வணங்கு கின்றேன்-ஏற்று
கைதூக்கி விடுவாயா போற்று கின்றேன்
விதியென்று ஒதிங்கிநீ போக வேண்டாம்- படும்
வேதனைக்கி மாற்றுவழி செய்வாய் ஈண்டாம்


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...