Showing posts with label குடியரசு கொண்டாட்டம் உண்மை நிலை மாற்றம் தேவை. Show all posts
Showing posts with label குடியரசு கொண்டாட்டம் உண்மை நிலை மாற்றம் தேவை. Show all posts

Sunday, January 25, 2015

குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக் குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே



குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான்  ஒன்றே –உண்மைக்
    குடியரசாய்  கொண்டாடி  மகிழ்வோம்  நன்றே -மேகம்
இடியிடித்தும்  மழையின்றி  போதல்  போல – வீணே
     எண்ணற்ற தியாகிகளின்  தியாகம்  சால -அழிந்து
தடியெடுத்தோர் ஆளுகின்ற நிலைதான்  கண்டோம்- நாளும்
     தாங்கிடவே  இயலாத்  துயரே!  கொண்டோம் –நல்ல
முடிவெடுத்து  வாக்குகளைப்  போட  வேண்டும் –என்ற
    முடிவொன்றே குடியரசு  வாழ்த்தாம்  ஈண்டும்
                    புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...