Showing posts with label சமூகம் வாழும் முறை பொருள் தேடும் வழி கவிதை புனைவு. Show all posts
Showing posts with label சமூகம் வாழும் முறை பொருள் தேடும் வழி கவிதை புனைவு. Show all posts

Thursday, June 11, 2015

ஐயன் வழிதனில் செல்வீரே அன்பால் உலகை வெல்வீரே!



திரைகடல் ஓடு என்றாரே
திரவியம் தேடு என்றாரே!
குறையிலா வழியில் அதைப்பெற்றே
கொள்கையாய் அறவழி தனைக்கற்றே!
நிறைவுற அளவுடன் நிதிசேர்ப்பீர்
நிம்மதி அதனால் வரும்பார்ப்பீர்!
கறையிலா கரமென புகழ்பெறுவீர்
கண்ணியம் கடமை எனவாழ்வீர்!


வையம் தன்னில் வாழ்வாங்கும்
வாழின்! வாழ்வில் பெயரோங்கும்!
செய்யும் எதையும் தெளிவாகச்
செய்யின் வருவது களிவாகப்!
பொய்யோ புரட்டோ செய்யாமல்
போலியாய் வேடம் போடாமல்!
ஐயன் வழிதனில் செல்வீரே
அன்பால் உலகை வெல்வீரே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...