Showing posts with label சாதி மடமை நீங்கிட வேண்டல் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label சாதி மடமை நீங்கிட வேண்டல் கவிதை புனைவு. Show all posts

Saturday, July 22, 2017

போகாது போகாது சாதி மடமை-சிலரின் பிழைப்புக்கே அதுதானே துணையாம் உடமை





போகாது போகாது சாதி  மடமை-சிலரின்
   பிழைப்புக்கே  அதுதானே துணையாம்  உடமை
நோகாது  வாழ்கின்றார்  சொல்லி  அதனை-அன்னார்
   நோக்கமும் நிறைவேற நாளும் இதனை
சாகாது  காக்கின்றார்! அந்தோ  கொடுமை-எனவே
   சதிகாரர் சூழ்ச்சிக்கு  மக்கள்   அடிமை
ஆகாது இதுவென்றே உணரும்  நாளே-உலக
   அமைதிக்கு வழிகாணும்! தருவீர்  தோளே!

புலவர் சா  இராமாநுசம் 

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...