முன்போல தமிழ்மணமும் வருவ
தில்லை- பதிவை
முறைப்படுத்தி முறையாக
தருவ தில்லை
என்போன்றார்
பலபேரும் ஏனோ யின்றே-வலையில்
எழுதாது
போகின்றார் அறியேன் நன்றே
பொன்போலும் பொருள்போலும் போற்றி வந்தார்-நாளும்
போனாராம்! முகநூலில் பதிவே தந்தார்
அன்போடு வேண்டுகிறேன்
வருவீர் மீண்டும் –எந்தன்
அழைப்புக்கே செவிசாய்த்து தருவீர் ஈண்டும்
புலவர் சா இராமாநுசம்

