Showing posts with label டெல்லி முதல்வர் பதவி ஊழல் கூத்து கருத்து. Show all posts
Showing posts with label டெல்லி முதல்வர் பதவி ஊழல் கூத்து கருத்து. Show all posts

Monday, December 30, 2013

அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\ ஆத்மி கட்சி திவாலே!






அந்தோ பாவம் கெஜரிவாலே –ஆம்\  
    ஆத்மி கட்சி திவாலே!
வந்தார் ஊழல் ஒழிக்கவென –கிழிய
    வாயும் ஒலிக்க முழக்கமென!
தந்தார் மக்களும்  ஓட்டுகளை-வீசித்
     தள்ளினர் இலஞ்ச  நோட்டுகளை
அந்தோ!! உண்மை! அறியாரே – நாளும்
    அடுத்தென விரைவில் புரிவாரே!

பக்கா ஊழல் துணையாக –இன்று
    பதவி ஏற்றார் பிணையாக
முக்கா கிணறு  தாண்டுவதா –இவர்
    முடிவு நாட்டுக்கு வேண்டுவதா!!!?
பாழாய் கிணற்றில் வீழ்ந்துவிட்டார் –ஏனோ
   பதவி ஆசையா !! தாழ்ந்துகெட்டார்
வாழா    வெட்டி ஆட்சிக்கே –முதல்வர்
    வந்தார் இவரென  சாட்சிக்கே

         புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...